chennireporters.com

#ECR ஈஞ்சம்பாக்கத்தில் ஷீரடி சாய் பாபா பெயர் சொல்லி மோசடி செய்யும் பிரேம் கல்லாட் .

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சீரடி சாய்பாபா கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் உரிமையாளர் பிரேம் கல்லாட்  இவர் கேரளாவை சேர்ந்தவர்.  இந்த இடத்தின் அருகிலேயே இன்னொரு கேரளா சாமியின் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தின் பத்திரப்பதி மோசடியான டபுள் டாக்குமெண்ட் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த பத்திரத்தில்  கோயில் என்று பதிவு செய்யாமல் யோகா மையம் என்று  தான் பதிவு செய்துள்ளனர்.  இந்த இரு  கோயிலிகளில் வரும் காணிக்கை மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் அனைத்தும் மேற்படி பிரேம் கல்லாட்டுக்கே  சென்று விடுகிறது.

 

பிரேம் கல்லாட்.

அந்த இடத்தின் உரிமையாளர் பிரேம் கல்லாட்  2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலாங்கரையை சேர்ந்த கல்யாண் சாரங் என்பவருக்கு தனது இடத்தில் பப்பு நடத்திக் கொள்ள 5 லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு  ஏழு  வருடங்களுக்கு (7)ஒப்பந்தம் போட்டு கொடுத்துள்ளர்.

 

2022 ஆம் ஆண்டு கல்யாண் சாரன் 1957 மெட்ராஸ் வார்ப் என்கிற பெயரில் கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு பிரேம் கல்லாட் நடத்தி வந்த ஹாட் கிச்சன் என்ற உணவகத்திலிருந்து தான் உணவுகள் இந்தப் பப்புக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில் பெரும் லாபம் சம்பாதித்து வந்த பிரேம் கல்லாட் குறுகிய காலத்தில் கல்யாண் சாரங் நடத்தி வந்த பப்பில்  நல்ல வியாபாரம் நடக்கிறது என்கிற பொறாமையின் காரணமாக உடனடியாக தன்னிடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

காவல்துறைக்கும் புகார் அளித்தார் வழக்கறிஞர் மூலம் இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பினார்.  அதன் பின்னர் கல்யாண் சாரங் இடத்தை காலி செய்ய முடியாது என்று  நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த நிலையில் கல்யாண் சாரங் நடத்தி வரும் கடையின் உரிமத்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் பொய்யாக பாபா கோயில் பிரச்சனையை கொண்டு வந்து இழுத்து விடுகிறார் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தார் கல்யாண்.

பிரேம் கல்லாட்

இந்த பாபா கோயில் பத்திலம் பதிவு செய்யப்பட்டதில் இந்த இடம் யோகா பயிற்சி செய்யும் தியான மையம் என்கிற அடிப்படையில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர் இங்கு பாபா கோயில் கட்டியுள்ளார். அதேபோல கேரளாவில் பிரசித்தி பெற்ற முத்தப்பன் என்கிற கோயில் ஒன்றையும் கட்டி  நடத்தி வருகிறார்.

 

கல்யாண்.

இந்த இரு  கோயில்களில் வரும் உண்டியல் பணம் மற்றும் அனைத்து விஷயங்களும் தனிநபரான பிரேமுக்கு போய் சேருகிறது. தன்னை திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உடன்பட்டு எழுதிக் கொடுத்த ஒப்பந்தம் போட்ட ஆவணத்தை மதிக்காமல் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து போலீசில் அடிக்கடி பொய் புகார் அளித்து வருகிறார் என்கிறார் கல்யாண்.  இந்த விவகாரம் குறித்து பிரேம் கல்லாட் தனது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

advt news.

இதையும் படிங்க.!