chennireporters.com

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக டாக்டர். சைலேந்திரபாபு நியமனம்.

தமிழகத்தின் புதிய டிஜிபியாக டாக்டர் சைலேந்திரபாபு அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் புதிய டிஜிபியாக யார் வரப் போகிறார்கள் என்கிற பேச்சு அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பரபரப்பான பேச்சு இருந்து வந்தது.

தமிழக அரசு 10 பெயர் கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் பெயர் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது.

சைலேந்திரபாபு, சஞ்சய் அரோரா, கரன்சின்ஹா, சங்கர் ஜிவால் என 10 பெயர்கள் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால் சைலேந்திர பாபு அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக நமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கடைசியாக மத்திய அரசு மூன்று பெயர் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பும்.

அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும் அவர் சைலேந்திரபாபு வாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

நாம் குறிப்பிட்ட தைப்போலவே தமிழக அரசு டாக்டர் சைலேந்திரபாபு அவர்களை தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

நாளையுடன் டி.ஜி.பி. திரிபாதி அவர்களுடைய பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய டிஜிபியாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க.!