chennireporters.com

துபாய் அரசுக்கு 1000ம் புத்தகங்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

துபாயில் நேற்று 13/11/2022 ஞாயிறு அன்று மதியம் 3 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்‌ வழங்கிய 1000 நூல்களை,துபாயில் உள்ள பிரமாண்டமான‌‌ நூலகமான முஹம்மது பின் ரஷீது நூலகத்திற்கு மாண்புமிகு பள்ளி‌கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நூலகத்தின் உயர் அதிகாரியான முகமது பின் ராஷித் நூலக இயக்குனர் டாக்டர் முகமது பின் சாலெம் அல் மசூரி அவர்களிடம் ஒப்படைத்தார்.

அரசு நெறிமுறையுடன் நடைப்பெற்ற சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் மேதகு மீர்ஷா ஹுசைன் அல் சாஹிப், மேதகு ஈசா சாலிஹ் அப்துல்லா அல் குரைர், அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான்,விழா‌ஒருங்கிணைபாளர் ஜவேரியா மற்றும் முஹம்மது பின்‌ ரஷீது நூலக அதிகாரிகள் ஹுதா,நூரா,கதிஜா உள்ளிடோர் உடன்‌ இருந்தனர்.

 

மேலும் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அங்குள்ள நூலக உயர் அதிகாரிகள் நூலகத்தை சுற்றி காண்பித்தனர். மிகவும் பழமை வாய்ந்த கி.பி 5 ம் நூற்றாண்டில் இருந்த பழமை வாய்ந்த நூல்களையும்,16 நூற்றாண்டில் தங்கத்தால் எழுதப்பட்ட குர் ஆனையும், பழமைவாந்த வால்மிகி ராமாயணம் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட கிபி 16 ம் நூற்றாண்டுக்கு முந்தைய எழுத்துரு நூல்களையும், குறிப்பாக சீனா போன்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட குர் ஆன் போன்ற இஸ்லாமிய நூல்களையும் காண்பித்து, நூலகத்தில் வரலாற்றை பறைசாட்ட கூடிய அருங்காட்சியத்தையும் விளக்கி அமைச்சர் அவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்த போது அமைச்சர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சிவுற்றார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நூலக இயக்குனர் முஹம்மத் சாலம் அல் மசூரி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் வைத்தார் மற்றும் அதிகாரி மற்றும் அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அரசு நெறிமுறையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் முகமது பின் ராஷித் நூலக இயக்குனர் டாக்டர் முகமது பின் சாலெம் அல் மசூரி அவர்கள், முகமது பின் ராஷித் நூலக மாதிரி வடிவிலான பளிங்கிகற்கலான நினைவுப்பரிசினை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

 

நிகழ்ச்சியின் நிறைவாக முஹம்மது பின்‌ ரஷீது‌ நூலகத்தின் வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்,உயர் அதிகாரிகள் உட்பட மாண்புமிகு அமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.  நிகழ்வின் முன்னதாக முகமது பின் ராஷித் நூலக அலுவலகத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் அவர்களை நூலக அதிகரிகள் நுழைவு வாயிலிருந்து அரசு மரியாதையுடன் அழைத்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் துபாயில் திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்துப்பேசினார். துபாய், லேண்ட்மார்க் ஹோட்டலில் தமிழ் நாட்டிலிருந்து அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுடன் வருகைப்புரிந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் துபாயில் திமுகழக நிர்வாகிகளை சந்தித்துப்பேசினார்.

அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், தமிழ்நாட்டை வழி நடத்தி கொண்டிருக்க கூடிய நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் திராவிட பாரம்பரியத்தை கட்டிகாக்கவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறந்தக்கல்வியை கொடுப்பதற்கு அரும்பாடுப்பட்டு கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் தமிழக அளவில் அரசுப்பள்ளிகளில் நடைப்பெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றிப்பெற்ற அறிவார்ந்த 65 மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து கல்வி சுற்றுலாவிற்காக வருகை தந்த நான்‌ உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும்‌ இத்தகைய கல்வி சுற்றுலாவின் போது அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் எஸ்.எஸ். மீரான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துகொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

நிறைவாக அமீரக திமுக‌பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.  நிகழ்ச்சியில் அமீரக திமுக நிர்வாகிகள் பிளாக்துலிப் செந்தில் சரத்,முஸ்தஃபா,அன்பு,வி.எம்.பிரபு,ஏஜிஎம் பைரோஸ்கான், இளமுருகன், செந்தில் பிரபு,இர்ஷாத் மற்றும் அமீரக எழுத்தாளர் குழுமத்தை சேர்ந்த ஆசிஃப் மீரான்,ஜெஸிலா,ரியாஸ் அகமது,நித்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!