chennireporters.com

தலைமைச்செயலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை. சிக்கிய செந்தில் பாலாஜி.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர் அது தவிற  தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமன விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.அதை தொடர்ந்து கடந்த மாதம் இறுதி வாரத்தில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு, கோவையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, தமிழக அரசு ஒப்பந்ததாரரான கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அவரது சசோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அவரது நண்பரான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரக்கு வாகன ஒப்பந்ததாரரான சச்சிதானந்தம் வீடுகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்தினர்.சென்னையில்  கிரீன் வேஸ் சாஈலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, பிஷப்கார்டன் பகுதியில் உள்ள சகோதரர் அசோக் குமார் வீடுகளிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையிலும் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் பெரிய அளவில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் வங்கி கணக்குகள், வங்கி பண பரிவர்த்தனை கணக்குகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு நேற்று மதியம் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை பாதுகாப்பு படை வீரர்களுடன் சோதனை நடத்த வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக காவல்துறை, இது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைமை செயலகம் எனவே, மத்திய துணை பாதுகாப்பு படை வீரர்களை எங்களால் அனுமதிக்க முடியாது. வேண்டும் என்றால் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்று கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை தடுத்து நிறுத்தினர். பிறகு வேறு வழியின்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் அறையில் சோதனை செய்துவிட்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் தலைமை செயலாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் நேற்று காலை முதல் மதியம் வரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தான் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். பின்னர் பிற்பகலுக்கு பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு ஆயுதங்களுடன் அதிதீவிர படை வீரர்கள் 20 பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

இதையும் படிங்க.!