திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருப்பதாக ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு இதயத்தில் “இன்பார்க்ட்” என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும்.
ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்த குழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை உருவாக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப் பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகர் ரஜினிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.