chennireporters.com

100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் முறைகேடு ஐந்து அதிகாரிகள் கைது.

100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை முறையீடு செய்து விட்டதில் சம்பந்தப்பட்ட அரசு ஐடியா அரசு அதிகாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் முக்கிய குற்றவாளியான நர்மதாவை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வீட்டு மனைப் பிரிவுகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மோசடி நடந்துள்ளது. அதற்கு உடந்தையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் ஏ,பி மற்றும் பால்நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டு மனை பிரிவுகள் அமைக்கப்பட்டன. இதற்கு பொதுப் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 16.6 4 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் பிடிஒ அவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர்.

ஆனால் அந்த நிலங்களை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதற்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை, காஞ்சிபுரம் நில எடுப்பு தாசில்தார் எழில் வளவன், ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் உதவியாளர் பெனடியன் ஆகியோரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 5 பேரையும் கைது செய்த சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் காஞ்சிபுரம் நில எடுப்பு டிஆர்ஓ நர்மதா தலைமறைவாக இருக்கிறார்.

இவர் ஏற்கனவே இந்த வழக்கில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளார்  என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

அவரை கைது செய்தால்தான் இந்த வழக்கில் அனைத்து உண்மை தகவல்களும் தெரியவரும். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 100 கோடி ஆகும்.

முன்னதாக மற்றொரு நில மோசடி வழக்கில் அமலதாஸ் ராஜேஷ் ,சார் பதிவாளர்கள் சுரேஷ் மற்றும் ரவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க.!