எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி திடீர் கைது.

November 28, 2021

By இரா. தேவேந்திரன்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி என்கிற நடுப்பட்டி மணியை சேலம் குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிகாலை அவரை கைது செய்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடந்த அக்டோபர் மாதம் மணி மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று சேலம் குற்றப்பிரிவு போலீசார் நடுப்பட்டி மணியை கைதுசெய்தனர்.

மணியை தவிர எடப்பாடியின் உறவினர்களாக இருந்த பலர் தமிழகத்தின் பல துறைகளில் வேலை வாங்கி தருவதாக பலர் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.தற்போது தான் ஒவ்வொரு புகாராக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே சேலம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

November 28, 2021

Leave a Comment