chennireporters.com

கோடியில் புரளும் சூதாட்ட கிளப்புகள். கல்லா கட்டும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கோடிக்கணக்கில் ரம்மி மற்றும் மங்காத்தா, மூன்று சீட்டு, ஒரு நம்பர் லாட்டரி என சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு சூதாட்ட கிளம்புகள் நடைபெற்று வருகிறது.  இது தொடர்பாக தினமும் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை சூதாட்ட கிளம்பு உரிமையாளர்கள் கல்லா கட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அப்துல் கலாம் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் உளவுப் பிரிவு துறை தலைவருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.  அந்த கடிதத்தில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக சூதாட்ட கிளம்புகள் இயங்கி வருகிறது.குறிப்பாக தி .நகர் அபிபுல்லா சாலையில் சக்தி ரெகரேஷன் கிளப் என்ற பெயரில் சூதாட்ட கிளப் ஒன்று இயங்கி வருகிறது.  இந்த கிளப்பை அதிமுகவை சேர்ந்த சுரேஷ் என்பவரும் பாஜகவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் நடத்தி வருகின்றனர்.  இவர்களுக்கு பக்க பலமாக முன்னாள் அதிமுக தி நகர் எம்எல்ஏ  ஒருவர் பின்புலத்திலிருந்து இயக்கி வருவதாக கூறப்படுகிறது. அதே போல அங்கு சட்டத்திற்கு புறம்பாக அனைத்து வசதிகளுடனும் மது மற்றும் மாது என சகல வசதிகளுடன் சூதாட்ட கிளப் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.நாள் ஒன்றுக்கு இந்த கிளம்பில் மட்டும் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வசூல் ஆகிறது. என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.  அது தவிர இந்த கிளப்பு நடத்த இவர்கள் உயர் போலிஸ் அதிகாரிகள் முதல் கீழ் மட்டத்தில் உள்ள போலீஸ்காரர்கள் வரை மாதம் ஒன்றிற்கு ஐந்து லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக கொடுப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இணையானையர், துணையானையர், உளவுப் பிரிவு ஆணையர் என அனைவருக்கும் லஞ்ச  பணத்தை நேரிலும் கூகுள் ஃபேவிலும் பணம் லஞ்சமாக அனுப்பப்படுகிறது. என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.இந்த கிளப்பு நடக்கும் காவல் நிலையத்திற்கு மாதம் ஒன்றுக்கு  லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.  இதனால் பல இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது.  இதேபோல வடபழனி பகுதியிலும் இதுபோன்ற நான்கு சூதாட்ட கிளம்புகள் இயங்கி வருகிறது.  இந்த ரமேஷ் மற்றும் சுரேஷ் இருவர் கூட்டணி ஆவடி மாநகர காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட ரெட்டையேரி பகுதியிலும் சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.  அது தவிர பலர் கோயம்பேடு கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ,அமைந்தகரை, ஆலந்தூர், வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் இந்த சூதாட்ட கிளப்புகள் இயங்கி வருகிறது. அது தவிற லைசன்ஸ் மது பார்களில் கால்கே(ர்)ள்ஸ் எனப்படும் பெண்களை வைத்து ஆபாச நடனங்களும் இயங்கி வருகிறது.

 

இதனால் அந்த பகுதியில் பெரும் வாகன போக்குவரத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகிறது . சூதாட்டத்தில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து விளையாடி தோற்றவர்கள் குடித்துவிட்டு  அந்த இடங்களில் சண்டை போடுவதாக கூறப்படுகிறது.  சென்னை மாநகரத்தில் உள்ள நான்கு இணை ஆணையர்களும் இதுவரை எந்தவிதமான இந்த சூதாட்ட கிளப்புகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூதாட்ட கிளப்பில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுடனும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பின்புலத்திலும் இந்த கிளப்புகள் இயங்கி வருகிறது.சென்னையில் நடைபெறும் அனைத்து சூதாட்ட கிளம்புகளுக்கும் அதிமுகவை சேர்ந்த சுரேஷ் பாஜகவை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவர் கூட்டணி தான் நம்பர் ஒன் டீம் லீடர் என்று சொல்கிறார்கள் இவர்கள் ஏற்கனவே காவல்துறை தலைமை தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கும் அவரது நண்பர்கள் மூலம் வெளிப்படையாகவே தாங்கள் லஞ்சம் கொடுத்ததாக சொல்லுகிறார்கள்.

எனவே தயவு கூர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது உளவுத்துறை அதிகாரிகளே இந்த சூதாட்ட கிளம்பு உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கி வருவது வேதனைக்குரிய சம்பவம் என்றும் தமிழக அரசு ரம்மி விளையாட்டை தடை செய்த பிறகும் இதுபோன்ற சமூகவிரோதிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது இது குறித்து நாம் விசாரித்த போது ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ரமேஷ் சுரேஷ் ஆகிய இருவர் கூட்டணி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக சூதாட்ட கிளம்புகள் நடத்தி வருவதும் அதன் மூலம் இவர்கள் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கு கடமை தவறாத காக்கிகள் இந்த சூதாட்ட கிளம்பு உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கவில்லை என்று மறுக்கப் போகிறார்களா இல்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இவர்களிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று உளவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள அப்துல் கலாம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

 

 

இதையும் படிங்க.!