திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றியம் பாதிரிவேடு சிறுத்தை தாஸ் அவர்கள் எழுச்சித் தமிழர் டாக்டர் அண்ணன் தொல் திருமாவளவன் எம்.பி. அவர்களின் 61 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நூற்றுக்கணக்காண வி.சி. கவை சேர்ந்த தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்பு ஏழை தாய்மார்களுக்கு நூறு புடவைகள் வழங்கப்பட்டன. பின்னர் பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்று அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.விழாவின் முடிவில் மாவட்டச் செயலாளர் நீலமேகம் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாதிரிவேடு சிறுத்தைதாஸ், கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் வக்கில் ஜீவா, ஆனந்தன்,அரி, விமல், சாமு,அமுல், சிவா, டில்லி, சக்திவேல், அஜித், மதன், தவசி, விக்கி, நாகராஜ், ஏமநாத், உள்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.