chennireporters.com

சீரழியும் சிறுவாபுரி முருகன் கோயில் கல்லாக்கட்டும் நிர்வாகிகள்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ளது பழமை வாய்ந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோயில்.  இந்த கோயிலில் இன்று ஆடி மாதம் பரணி இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு பொது வழி தரிசனம், 100 ரூபாய் கட்டணம், ரூ.50 கட்டணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.வழக்கத்திற்கு மாறாக இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் இலவச தரிசனத்திற்கும் 100 ரூபாய் தரிசனம் ரூ.50 தரிசனம் என அனைத்து பிரிவுகளிலும் கூட்டம் அலைமோதியது இந்த நிலையில் 100 ரூபாய் கட்டணம் வாங்கிய பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர் கோயில் கருவறையில் கேட் மூடப்பட்டிருந்தது காரணம் கேட்டால் விஐபிகள் வந்திருக்கிறார்கள் 100 ரூபாய் கட்டணம் கொடுத்தவர்கள் நாங்கள் சொல்லும் வரைக்கும் காத்திருந்து தான் ஆக வேண்டும் என்று கோயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் சில குண்டர்கள் பக்தர்களை மிரட்டினர்.இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்களையும் கோயில் ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்தனர். இந்த நிலையில் திரைப்பட நடிகர் சித்தப்பு பருத்திவீரன் சரவணன் சாமி கும்பிட வந்திருந்தார்.  இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அல்லது ஊழியர்கள் யார் அந்த வி ஐ பி என்கிற தகவலையும் சொல்லவில்லை. சிறிது நேரம் காத்திருங்கள் என்று கனிவுடனும் பேச வில்லை. மாறக மிரட்டும் தொனியிலேயே பேசினார்கள்.இந்த நிலையில் கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் தனியாக உள்ள ஒரு வழியில் ஒயிட்டன் ஒயிட்டில் வந்த சில அரசியல்வதிகள் மற்றும் பிசினஸ்மேன்களுக்கு கதவைத் திறந்து கல்லாக்கட்டும் வேலையும் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும் பொதுமக்களை  மிரட்டி கொண்டிருந்தனர்.உங்களுக்கு யார் வருகிறார்கள் யார் வி ஐ பி என்ற தகவல் எல்லாம் உங்களுக்கு சொல்ல முடியாது 100 ரூபாய் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் உங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டுமா என்று கோயில் நிர்வாகிகளும் காவல்துறையினறும் பதில் அளித்தனர். இதுகுறித்து கோயிலில் நிர்வாக அதிகாரி செந்தில்குமாரை நாம் நேரில் சென்று பார்க்க முற்பட்டோம் அவர் வெளியில் சென்று இருப்பதாக கூறினார்கள்.

இந்த கோயிலில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப் போல நிறைய ஊழியர்கள் தனித்தனியாக சாவியை வைத்துக்கொண்டு அவர்களுக்கு தெரிந்தவர்களையும் தனியாக வெயிட்டாக கவர் தரும் விஐபிகளுக்கும் கதவை திறந்துவிட்டு கால் பிடிக்கும் வேலையை செய்து வந்தனர். அது தவிர உள்ளே  உள்ளே சாமியை தரிசிக்க செல்லும் எந்த பக்தரையும் சாமி அருகில் விடாமல் தனியாக சில பெண் ஊழியர்கள் மற்றும் சிலர் போகும்போதே சாமியை கும்பிட்டுக் கொண்டே செல்லுங்கள் சீக்கிரம் கிளம்புங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால் தனியாக கவர் கொடுக்கும் விஐபிகளை மட்டுமல்ல காசு கொடுக்கும் எல்லோரையும்  மூவலரின் சன்னதி அருகிலேயே உட்கார வைத்து மாலை மரியாதை செலுத்தி அவர்கள் தடபுடலாக சாமியை கும்பிட வழிவகை செய்து தந்தனர்.அது குறித்து பக்தர் ஒருவர் கேட்டபோது யார்,யார் நீ இதையெல்லாம்  நீ கேள்வி கேட்கக்கூடாது வெளியே போ என்று அவரை வெளியே துரத்தினர். அடி,தடி, கட்டப்பஞ்சாயத்து என எல்லா வகைகளிலும் கல்லா கட்டி வரும் கோயில் நிர்வாகமும் ஊழியர்களும் எல்லா சட்டத்திற்கு புறம்பான எல்லா வேலைகளையும் செய்து வருகின்றார்கள். கடவுள் தண்டிப்பார் கண்டிப்பாக என்று சொல்வதெல்லாம் பொய்தானோ என எண்ண தோன்றுகிறது.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் பாவங்களையும் ஆயிரம் பிராடுத்தனங்களையும் செய்து கல்லா கட்டி வரும் கோயில் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் முருகன்  வேலெடுத்து குத்து வாரா இல்லை கொள்ளையடிக்கும் கருவறை ஐயர்களுக்கு பாதுகாப்பாக இருப்பாரா என்பதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தான் சொல்ல வேண்டும். வயதானவர்களும் கர்ப்பிணிப் பெண்களும்  குழந்தைகளும்  நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்தனர். முருகா உனக்கு கண்ணில்லையா இவர்கள் இப்படி செய்கிறார்களே என்று அவர்கள் முணுமுணுத்தது அந்த முருகனுக்கும் கேட்கவில்லை கோயில் நிர்வாக ஊழியர்களுக்கும்  கண்டு கொள்ளவில்லை சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு நீண்ட நேரம் காத்திருந்து முருகனை தரிசித்து சென்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் விஐபி தரிசனத்திற்கு தடை விதிக்க வேண்டும். கோயில் நிர்வாக அதிகாரிகள் ஊழியர்கள்  சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக இருக்கும்  காவல்துறை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்கள் பணியை மட்டும் செய்ய வேண்டுமே தவிர தங்களுக்கு தெரிந்தவர்களையும் உறவினர்களையும் தனியாக அழைத்துச் சென்று சாமி கும்பிட அனுமதிக்க தடை விதிக்க வேண்டும். கோயில் விசேஷ நாட்களில் தன்னார்வலர்களை வைத்து பொதுமக்களை உதவி செய்யும் வகையில் பணியாற்ற உத்தரவிடவேண்டும். கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று  முருகன் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடுமி, குடுமி என்று கோயிலுக்கு சென்றால் அங்கு இரண்டு குடுமி அவுத்து போட்டு ஆடிய கதையாகத்தான் இருந்தது இன்றைய சிறுவாபுரி  முருகன் கோயில் நிலை.

 

இதையும் படிங்க.!