chennireporters.com

காஸ் சிலிண்டர் விலை உயர்வு.

கடைகள், ஹோட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 36.50 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் சிலிண்டர் விலை மொத்தம் ரூபாய் 1867.50 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூபாய் 900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு , அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது.

இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர்.சமையல் சிலிண்டர் விலை மாதத்திற்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்படுகிறது.இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை இன்று எண்ணை நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

19 கிலோ எடைகொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்களின் மாற்றத்தை ஏற்படுத்தியது.அதாவது கடந்த மாத விலையில் இருந்து ரூபாய் 360 அதிகரித்து உள்ளது .

இதனால் சென்னையில் கடந்த மாதம் ரூபாய் 1831 க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர் இந்த மாதம் 1867. 50க்கு விற்கப்படுகிறது.மத்திய அரசு தொடர்ந்து காஸ் விலையை உயர்த்திக் கொண்டே வருவதை வணிக நிறுவனங்களும் இல்லத்தரசிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ஒரு நிலையான விலையை நிர்ணயித்து இல்லத்தரசிகளின் மனதை ஒன்றிய அரசு குளிர வைக்குமா என்பது இந்தியா முழுவதும் உள்ள இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க.!