Chennai Reporters

சென்னை பீச் ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டது.

இன்று சென்னை பீச் ரயில் நிலையத்தில் சுமார் 4.25 நடை மேடை எண் 01 ல் பணிமனைக்கு சென்று திரும்பிய ரயில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரயில் தடம்புரண்டது.

ரயிலை ஓட்டிவந்த ஓட்டுனர் சங்கரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த நடை மேடையில் ஏறி கட்டிடத்தின் மீது மோதி நின்றது.

அப்போது பெரும் சத்தம் ஏற்பட்டு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இந்த சம்பவத்தில் வண்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த வித பாதிப்பும், உயிர் சேதமோ ஏற்படவில்லை.

மேலும் ரயில் ஓட்டுனருக்கும் எந்தவித காயமும் ஏற்ப்படவில்லை.நடைமேடை (plat form)1-ல் இருந்த கடைகள் மற்றும் சுவரின் மீது ரயில் மோதியது.

அதஷ்ட்டவசமாக பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரிய விபத்து ஏதும் நடைபெறவில்லை.இந்த ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!