chennireporters.com

லஞ்சமாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பிராடு பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ..

எந்த தயக்கமின்றியும் யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக பெண் அதிகாரிகள் நாளுக்கு நாள் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது. தாம்பரம் காவல் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதத்தில் மூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   தாம்பரம் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்டது கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையம். இங்கு  இன்ஸ்பெக்டராக  பணியாற்றிவந்தவர் மகிதா அன்ன கிருஷ்டி.  கடந்த மாதம் இவரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.அதன் பெயரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக மகிதா அன்னக்கிருஷ்டி   கடந்த மூன்றாம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற ஆட்டோ டிரைவர் கடந்த 4ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த பள்ளி மாணவியை கருக்கலைப்பு செய்ய சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர் மற்றும் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பிற்கான மாத்திரை வாங்கி பயன்படுத்தியதாக தெரிகிறது.இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த இன்ஸ்பெக்டர் மகிதாஅன்னகிருஷ்டி  மருத்துவர்களையும் மிரட்டி  கருக்கலைப்புக்கான மாத்திரை விநியோகம்  செய்து வந்ததை மூடி மறைக்க 12  லட்சம் ரூபாய் லஞ்ச பணமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா அன்னக்கிருஷ்டியிடம் விசாரணை நடத்தினார்.  இதில் கருக்கலைப்பு மாத்திரை விநியோகம் செய்ததாக அரசு மருத்துவர் பராசக்தியிடம் ரூபாய் பத்து லட்சமும் மற்றும் தனியார் மருத்துவர் உமா மகேஸ்வரிடம் இரண்டு லட்சம் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.லஞ்சமாக வாங்கிய இந்த பணத்தை  டாக்டர்களிடம் கமிஷ்னர் முன்னிலையில் திரும்ப கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து  மகிதா அன்னக்கிருஷ்டியை  சஸ்பெண்ட் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதில் கடந்த மூன்று  மாதத்தில் மூன்று பெண் இன்ஸ்பெக்ட்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தாம்பரம் மாநகர காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதையும் படிங்க.!