chennireporters.com

டெல்லியில் கேங்ரேப் செய்யப்பட்டு இளம்பெண் படுகொலை..

“சபியா” இந்திய ஊடகங்கள் சொல்ல மறந்த பெயர்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் பெயரும் இதுதான் இருபத்தி ஒன்று வயதான இளம்பெண் சபியா கடத்தி கேங் ரேப் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி தலைநகரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பிரபலமான எந்த செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த செய்தி ஒளிபரப்ப படவில்லை என்ற குற்றச்சாட்டை சபியாவின் குடும்பத்தினர் முன்வைக்கின்றனர்.

கடந்த 27 ம் தேதி சங்கம் விஹார் என்ற பகுதியில் சபியா கடத்தப்பட்டுள்ளார்.வீட்டுக்கு வராத தன் மகள் சபியா பற்றி டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

பல இடங்களில் தேடியும் சபியா கிடைக்கவில்லை.சில தினங்கள் கழித்து அரியானா மாநிலம் பரிஜாபாத் அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் முகம் சிதைக்கப்பட்டு உடல் முழுக்க குத்துக் காயங்களுடன் இளம் பெண் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை செய்தனர்.

அறிக்கையும் வெளியிட்டனர் அதில் சபியா கற்பழிக்கப் படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் சபியாவின் குடும்பத்தினர் தன்னுடைய மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டு உடல் முழுவதும் 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லுகின்றனர்.

சபியாவை யார் கொலை செய்தார்கள்,எதற்கு கொலை செய்தார்கள் என்கிற தகவலை போலீசார் இதுவரை அறிவிக்கவில்லை.சபியா மத்திய பாதுகாப்பு துறையில் தன்னார்வலராக பணியாற்றி வந்தார்.அவருடன் நிஜாமுதீன் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.https://youtu.be/fhXHUC_LFa0

அவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சபியாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் சபியா ஒழுக்கம் இல்லாதவர் என்றும் அவர் பல ஆண்களுடன் நட்பு வைத்திருந்தார் அதனால் தான் நான் அவரை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சபியாவின் குடும்பத்தினர்;

thanks jak views

நிஜாமுதீன் யாரென்று தெரியவில்லை என்றும் அவனைப்பற்றி எங்கள் மகள் எங்களிடத்தில் எதுவும் சொல்லவில்லை என்றும் எங்களுக்குத் தெரியாமல் எங்கள் மகள் திருமணம் செய்திருக்க முடியாது என்று சொல்லுகிறார்கள் அவரது குடும்பத்தினர்.

ஒரு நபர் எவ்வளவு பெரிய கோபத்திற்கு ஆளாகியிருந்தாலும் 50 இடங்களில் குத்தி கொலை செய்திருக்க முடியாது.

ஒன்று அல்லது நான்கு பேருக்கு மேல் தான் கூட்டாக சேர்ந்து கொலை செய்திருக்க முடியும் என்று ஆணித் தரமாக சொல்லுகிறார்கள்.

சபியாவை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இருப்பினும் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகிறது.

பெண்களை புனிதமாக கருதும் நாட்டிற்கு இது நன்மை தரும் செய்தியாக இல்லை.

சபியாவின் கொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. சிபிஐ என்று சபியா வீட்டிற்கு வந்த ஒரு சிலர் சபியாவின் குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.

அது தவிர அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர் என்கின்றனர் சபியாவின் குடும்பத்தினர்.

சபியாவின் உடல் முழுக்க 50க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளன.

50 இடங்களில் குத்தப்படும் அளவிற்கு சபியா செய்த தவறு என்ன?

அப்படி கொலை செய்ததற்கான காரணம் என்ன? கொலையாளிகளின் பின்புலத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சபியாவின் கொலைக்கு நீதி வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் பரவலாக எழத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இளம் பெண்கள் கல்லூரி மாணவர்கள் செல்வி ஸ்டெஃபி YDP (youth Democratic party),சபரிமாலா போன்ற பெண் உரிமைக்காக போராடும் பல அமைப்புகள் சபியாவிற்கு நீதி வேண்டும் என்று போர்குரல் கொடுக்க        தொடங்கியுள்ளனர்.

நாமும் கேட்கிறோம் “சபியா”வின் கொலைக்கு நீதி வேண்டும்.

சபியாவின் கொலையில் மறைந்திருக்கும் சந்தேகங்கள் தெளிவுபடுத்த வேண்டும். பெண்களை கொலை செய்யும் கொலையாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்பதே தமிழக பெண் விடுதலை இயக்கங்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க.!