#GyanavabhiMosqueCase இந்துக்கள் வழிபடவும் அர்ச்சகரை நியமிக்கவும் வாரணாசி (varanasi court) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
#Gyanvabhi | #GyanvabhiCase | #GyanvapiMosqueCase | #UttarPradesh | #Varanasi
அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில் ஏற்கனவே ராமர் கோயில் இருந்தது என்று எழுந்த பிரச்சனையின் காரணமாக தொடரப்பட்ட வடக்கில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது அந்த நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்க தீர்ப்பளிக்கப்பட்டது இதன் அடிப்படையில் பாபர் மசூதி இருந்த இடத்தில் புதியதாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
இதே போல வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியும் சர்ச்சையில் சிக்கியது. இந்த கோவிலை இடித்துத்தான் ஞானவபி மசூதி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு வாரணாசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் இந்துக்களின் மிக முக்கியமான புனிதத் தலமாக உள்ளது. இக்கோயிலின் அருகே முஸ்லிம்களின் ஞானவாபி மசூதியும் அமைந்துள்ளது. இது முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டியதாகப் புகார்களும் உள்ளன. இதுதொடர்பான மீதான வழக்கு பல ஆண்டுகளாக வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இத்துடன், புதிதாக சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கும் தொடுக்கப்பட்டு வாராணசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கும் மசூதிக்கும் இடையிலுள்ள சுற்றுச்சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை பதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாத இங்கு, அம்மனை தரிசிக்க அனுமதிக்கக் கோரி வாரணாசி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின் போது மசூதியினுள் அறிவியல் ரீதியானக் கள ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதை நடத்திய இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது 839 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. மேலும் மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் கை, கால்களை கழுவும் இடத்தில் (ஒசுகானா) சிவலிங்கம் இருப்பதும் தெரியவந்தது.
ராமர் கோயில்
இந்த அறிக்கை வழக்கின் இருதரப்பு வாதிகளுக்கும் கடந்த 25-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், கோயிலை இடித்து மசூதி கட்டியுள்ளதாக ஏஎஸ்ஐ தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஞானவாபி மசூதியின் சுவரில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த, ஏஎஸ்ஐ இயக்குநர் (கல்வெட்டு) கே.முனிரத்னம் ரெட்டி தலைமையிலான நிபுணர்கள் குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது மசூதியின் சுவரில் 34 கல்வெட்டுகள் இருந்ததாகவும், அதில் 3 கல்வெட்டுகள் தெலுங்கு மொழியில் உள்ளதாகவும், சில கல்வெட்டுகள் தமிழ், கன்னடம், தேவநாகரி மொழிகளில் உள்ளதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வு அறிக்கையையும் ஏஎஸ்ஐ இயக்குநர் கொடுத்துள்ளார்.
வாரணாசி நீதிமன்றம்
இந்த நிலையில் தான், வாரணாசி நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த உத்தரவில்,“ஞானவாபி மசூதி வளாகத்தின் முன்பு சீல் வைக்கப்பட்ட பகுதியில் இந்துகள் வழிபட அனுமதிக்கப்படுகிறது. ஏழு நாட்களுக்குள் பூஜை தொடங்கும். அனைவருக்கும் அங்கு பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு” என தீர்ப்பளித்திருக்கிறார்.
வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின்,
இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின்,“மசூதியைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட தடுப்புகளை அகற்றுவது உள்ளிட்ட வழிப்பாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏழு நாட்களில் மாவட்ட நிர்வாகம் செய்து முடிக்க வேண்டும். மேலும், காசி விஸ்வநாதர் கோவில் பூசாரிகள் வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.