chennireporters.com

பொய் சொன்ன பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள்.

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பலை அந்நாட்டு கடற்படை ராணுவம் தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இருப்பினும் இது பொய்யான தகவல் என்பது தற்போது தெரியவந்துள்ளது.உலகின் அனைத்து நாடுகளிலும் அந்த நாடுகளை சுற்றியுள்ள குறிப்பிட்ட தூரம் வரையிலான கடல் பகுதி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சொந்தமானதாகும் .

இந்த கடல் பகுதிக்குள் முன்கூட்டியே அனுமதி பெறாமல் மற்ற நாடுகளின் கப்பல்கள் செல்லக் கூடாது.அப்படி சென்றால் அது சர்வதேச சட்டத்தின் விதி மீறலாக கருதப்படும்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு கடல் எல்லைக்குள் இந்திய கப்பல் நுழைய முயன்றதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பாகிஸ்தான் கடற்படை ரோந்து விமானம் வழக்கம்போல ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

அப்போதே எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் பாகிஸ்தானுக்கு சொந்தமான கடற்பகுதியில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடக்க முயன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் கடற்படை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியது என்று கூறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் கடல் எல்லைப் பகுதிகளை கண்காணித்து வருவதாகவும் இந்திய நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் கடற்படையின் ரோந்து விமானம் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறை என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டிலும் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் கடற்படை தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.இந்த சூழலில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கடந்த வாரம் எங்கே இருந்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கடல் எல்லையில் இருந்து 12 கடல் மைல் தூரம் வரை அந்த நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லை இருந்து வருகிறது.இருப்பினும் அந்த குறிப்பிட்ட நாட்களில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கராச்சி துறைமுகத்தில் இருந்து 150 கடல்மைல் தூரத்தில் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

அதே நேரம் இது குறித்து இந்திய கடற்படை தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் ராணுவம் தடுத்ததாக சொன்ன நாளில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு வெளியிலேயே இருந்துள்ளது.

இதையும் படிங்க.!