உத்திரப்பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள் என்று
உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எ.உதியுள்ளார். அந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
உத்தர பிரதேச மாநிலம் பாபேரு பண்டாவில் உள்ள சிவில் வழக்குகளை விசாரிக்கும் பெண் நீதிபதி சுஷ்ரி அர்பிதா சாஹு (Sushri Arpita Sahu) என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘சாமானிய மக்களுக்கு நீதி வழங்க விரும்புகிறேன். அந்த நீதியை வழங்குவதற்கு, கதவுகளின் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
பாலியல் துன்புறுத்தலுடன் என்னால் வாழ முடியாது. திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி நாற்காலியில் அமர்ந்து இருந்த போது அவரால் (மாவட்ட நீதிபதி) பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன். நீதிமன்றத்தில் இருப்பவர்கள் என்னை தீய சக்தியாக பார்க்கின்றனர். குப்பை போலவும் பார்க்கிறார்கள்.
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் என்பது ஒரு பெரிய பொய். இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் உட்பட யாரும் எனது குரலை கேட்கமாட்டார்கள், எல்லாரும் என்னைத் தற்கொலைக்குத் தள்ளுவார்கள்.
பாலியல் சுரண்டல்
மாவட்ட நீதிபதியாக இருக்கும் ஒருவர், என்னை அவரது வீட்டிற்கு இரவு நேரங்களில் வரச் சொல்கிறார். பாலியல் சுரண்டல்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் இனிமேலும் உயிர் வாழ விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடை பிணமாக வாழ்ந்து வருகிறேன். ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலை சுமந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இனிமேல் என் வாழ்க்கையில் எதுவும் மிச்சம் இல்லை. ஆகவே கண்ணியமான முறையில் என் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறேன் அனுமதி தாருங்கள் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 2022ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அலகாபாத் உச்ச நீதிமன்றம்
இந்த கடித விவகாரம் உத்தரபிரதேசம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது மேற்கண்ட கடிதம் வைரலாகி வருவதால், உத்தரபிரதேச ஐகோர்ட்டிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. நீதித்துறையில் உள்ள பெண் நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை சக நீதிபதிகளே பாலியல் தொல்லை கொடுத்தால் நீதியின் மாண்பை எப்படி யார் காப்பாற்றுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.