chennireporters.com

அரசியலை விட்டு இனி ஒருபோதும் விலக மாட்டேன்’’ சசிகலா பரபரப்பு பேச்சு.

சசிகலாவிடம் பேசிய ஐந்து பேர் அ.தி.மு.க விலிருந்து நீக்கி ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார் அவர் யாரிடமெல்லாம் பேசி வருகிறாரோ அவர்களை எல்லாம் அதிமுகவிலிருந்து நீக்கி விடுகிறார்கள்.

அப்படி முக்கிய புள்ளியான பெங்களூர் புகழேந்தியை கட்சி விட்டு நீக்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்து பலரை நீக்கி கொண்டே இருக்கிறார்கள்.

அந்தவகையில் ராணிப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் சசிகலா பேசியதாவது:நிச்சயம் வந்துருவேன் அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் ஒன்றாக இணைக்கிற முயற்சியில் நான் ஈடுபட்டேன்.

அதுக்கு அவங்க (அ.தி.மு.க.) ஒத்துவராம, ஒத்துழைப்பு தராம இருந்தாங்க.நாங்க தனியா நின்னு 150 தொகுதி வரைக்கும் ஜெயிப்போம்னு சொன்னாங்க.சரின்னு நானும் பொறுமையா இருந்தேன் ஆனால் இப்போ என்னாச்சு? நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.

அம்மாகூட நானும் சேர்ந்து வளர்த்த கட்சி இது.அந்த கட்சி வீணாகி விட கூடாது இனி அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே என் வேலை.

இனி ஒதுங்கி இருப்பேன், விலகி இருப்பேனு நிச்சயம் நான் சொல்லவே மாட்டேன்தொண்டர்களோட நம்பிக்கை வீண் போகாது நான் நிச்சயம் வந்துருவேன் என பேசினார்.

சசிகலா இப்படி தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகளிடம் பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்கினால் கடைசியில் அந்த கட்சியில் எடப்பாடியின் கைக்கூலிகள் ஜால்ராக்கள் மட்டுமே இருப்பார்கள்.

என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

சசிகலா தொண்டர்களிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசி வருவது ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி நம் கையை விட்டு கட்சி சசிகலா விடம் கை மீறிப் போய் விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

இதையும் படிங்க.!