chennireporters.com

சுகாதாரத் துறை செயலாளருக்கு திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி அவசரக் கடிதம்.

jayakumar.MP
எம்.பி. ஜெயகுமார்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொராணா காலத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் போதுமான வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. டாக்டர் ஜெயக்குமாருக்கு புகார் கடிதம் அனுப்பினார்கள். 

அதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் கும்மிடிப்பூண்டி  அரசு மருத்துவமனைகளில் திடீர்  ஆய்வு நடத்திய எம்.பி. டாக்டர்  ஜெயக்குமார் அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும்  ஆலோசனை நடத்தினார். 

அப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒண்பது மருத்துவ மனைகளில் 635 படுக்கைகள் உள்ளது.  ஆனால் நோயாளிகளுக்கு வெறும் 266  படுக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 160 படுகைகளை தயார் செய்யவில்லை என்றும் எந்த மருத்துவமனைகளிலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். 

பொன்னேரி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ,பள்ளிப்பட்டு, பழவேற்காடு ,பொதட்டூர்பேட்டை ,ஆவடி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்கள் அலுவலகப் பணியாளர்கள் இல்லாததால் கொராணா போன்ற பெருந் தொற்று காலத்தில் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக தேவையான பணியாளர்களையும் ஊழியர்களையும் மாவட்ட நிர்வாகம் நியமித்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உடனடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா விரைந்து செயல்பட வேண்டும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கலெக்டரும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க எடுப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க.!