chennireporters.com

தொப்பை குறைக்க எளிதான வழி.

இன்று பெரும்பாலான மக்கள் தொப்பையால் அதிகம் வருத்தம் கொள்கிறார்கள். வயது அதிகரிக்கும் போது, இளம் வயதில் நாம் சாப்பிட்ட உணவுகளின் தாக்கம் தெரியும்.

அப்படி இளம் வயதில் நாம் உண்ட உணவுகளின் ஓர் விளைவு தான் தொப்பை அதோடு தற்போது பலரும்.உட்கார்ந்து கொண்டே வேலை செய்து, உடலுக்கு போதுமான வேலையைக் கொடுக்காமல் இருப்பதால், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றுப் பகுதியில் தேங்கி தொப்பையை உண்டாக்குகின்றன.

கொழுப்புத் தேக்கத்தினால் உருவாகும் தொப்பை வயிற்றை அசிங்கமாக வெளிக்காட்டுவதோடு மட்டுமின்றி, டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல தீவிரமான பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், முதலில் தொப்பையைக் குறைக்க முயல வேண்டும். தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு பல வழிகள் உள்ளன.

தொப்பையைக் குறைக்க உதவும் எளிய 4 வழிகள்:

தொப்பையைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. உடலுறுப்புக்களுக்கு சிறிது கொழுப்புக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அந்த கொழுப்புக்கள் உடலில் அதிகமாகும் போது, அது உடலில் நோய்களுக்கான வீடாக மாறிவிடுகிறது.

எனவே உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க பின்வரும் சில எளிய வழிகளைப் பின்பற்றி வந்தாலே தொப்பையும் குறையும், ஆபத்தான நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபடலாம்.

தினமும் 10 கிராம் நார்ச்சத்தை உட்கொள்ளவும் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் தினமும் 10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொண்டு வந்தாலே சிரமமின்றி தொப்பையைக் குறைக்கலாம்.

இந்த கரையக்கூடிய நார்ச்சத்தைப் பெற தினமும் 2 ஆப்பிள் சாப்பிடலாம் அல்லது ஒரு கப் பச்சை பயறு/பச்சை பட்டாணியை உட்கொள்ளலாம்.

ஆனால் எந்த ஒரு உணவும் வயிற்றுக் கொழுப்பை நொடியில் கரைத்துவிடாது என்பதை ஒவ்வொரு நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையான வழியில் தொப்பையைக் குறைக்க பொறுமையும், சரியான அணுகுமுறையும் அவசியம்.

20 நிமிட உடற்பயிற்சி அவசியம்தொப்பைக் குறைக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 20 நிமிடம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

அதுவும் அந்த உடற்பயிற்சியானது வியர்வையை வெளியேற்றும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் உடலின் பெரும்பாலான பகுதிகள் வேலை செய்யுமாறும் இருக்க வேண்டும்.

இம்மாதிரியான உடற்பயிற்சியானது ஜூம்பா, கால்பந்து, நீச்சல் அல்லது கார்டியோ பயிற்சிகளில் கிடைக்கும்.

7-8 மணிநேர தூக்கம் எப்போது ஒருவர் குறைவான அளவில் தூக்கத்தைப் பெறுகிறார்களோ, அப்போது அவர்களின் மெட்டபாலிசம் குறைந்து, உடலில் கொழுப்புக்கள் அதிகமாகவும், வேகமாகவும் தேங்க வழிவகுக்கும்.

ஆகவே தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் 7-8 மணிநேர தூக்கத்தை கட்டாயம் பெற வேண்டும். தொப்பையைக் குறைக்க தூக்கம் மட்டும் போதாது என்றாலும், இதுவும் அவசியமான ஒன்று.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும் அனைவரது வாழ்க்கையிலும் மன அழுத்தம் இருக்கும். ஆனால் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், ஒருவர் மன அழுத்த அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஏனெனில் ஒருவருக்கு தொப்பை வருவதற்கு மன அழுத்தமும் ஓர் காரணம். இந்த மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்வது, யோகா செய்வது, குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது அல்லது நிபுணர்களின் உதவியைப் பெறலாம்.

இப்போது உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் சில பானங்களைக் காண்போம்.

இஞ்சி-எலுமிச்சை பானம்ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்டி, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

எடை இழப்பு காபி ஒரு டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூளை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்து கிளறி, மேலே சிறிது துருவிய டார்க் சாக்லேட்டைத் தூவி குடித்தால், தொப்பை குறையும்.

புதினா க்ரீன் டீ ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி, அதை கொதிக்க வைத்து, அதில் 5-7 புதினா இலைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சிறிது க்ரீன் டீ இலைகளை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து பின் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

இளநீர் பானம்ஒரு கப் அன்னாசி ஜூஸுடன் ஒரு கப் இளநீர் மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு தூள் மற்றும் 1 சிட்டிகை ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் குடித்தால் நான்கு வாரங்களில் உடல் சூடு குறைவதோடு மட்டுமல்லாமல் தொப்பையும் உடனே குறையும்.

எலுமிச்சை நீர்ஒரு கப் வெது வெதுப்பான நீரில், 1 எலுமிச்சையின் சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,

வீங்கி பானை போன்று இருக்கும் தொப்பை உடனடியாக குறையும்.

இதையும் படிங்க.!