சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செல்வலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் காலமானார். அவருக்கு வயது (62). அவருடைய உடல் அஞ்சலிக்காக புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டு. அதன் பிறகு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
டாக்டர் செல்வலட்சுமி .
புற்றுநோய் மருத்துவத்தில் சிறந்த நிபுணராக விளங்கிய டாக்டர் செல்வ லட்சுமி MBBS, DMRT,MD,., பட்டங்கள் பெற்றவர்.கடந்த 35 ஆண்டுகளாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்து,மக்கள் நலன் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.மறைந்த பத்ம விபூஷன் டாக்டர் வி சாந்தாவுடன் இணைந்து சமூக நலனுக்கு மகத்தான பங்களிப்புகளை செய்தவர் ஆவார். பொதுமக்களிடமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் அன்புடனும் கனிவுடன் பேசும் குணமுடையவர். அன்புடன் மருத்துவம் பார்க்கும் மனம் கொண்டவர் டாக்டர் செல்வ லட்சுமி.அவரின் மரணம் பொதுமக்களுக்கு பேரிழப்பு ஆகும் அவரின் ஆத்மா சாந்தியடைய பொதுமக்களுடன் நாமும் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம் . அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.