chennireporters.com

இந்தியா துபாய் இடையே விமானப் பயணம் செய்ய தடை.

இந்தியா தூபாய் இடையே விமான பயணம் செய்ய தடை நீடிக்கும் என தூபாய் ஏர் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா துபாய் இடையே பயணிகள் விமானம் இயக்குவது தொடர்பாக தடை அமலில் இருப்பதாக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதை முன்னிட்டு இருநாடுகளிடையே விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

மறு அறிவிப்பு வரும் வரை இது தொடரும் எனவும் அந்த ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய விமான போக்குவரத்துத்துறை அதிகாரி இந்தியா துபாய் இடையேயான பயண தடை தொடர்ந்து நீடிக்கும்.

இந்தியாவின் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்தியாவிலிருந்து மீண்டும் பயணிகள் சேவை தொடங்குவது குறித்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 25ஆம் தேதி முதல் இந்தியா துபாய் இடையே விமான போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. பல்வேறு முறை இந்த அறிவிப்பு நீட்டிக்கப்பட்டது.

முன்னதாக ஜூன் 23ம் தேதி முதல் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் விமானங்களை இயக்க துபாய் அரசாங்கம் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும் ஜூலை 6-ஆம் தேதி வரை இந்தியா துபாய் இடையே ஆன பயணத் தடை அமுலில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் விமானங்களை மீண்டும் இயக்குவது குறித்து அறிவிக்கப்படும்.

என இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனமும் துபாய் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!