திருவேற்காடு நகராட்சியில் பிராடுத்தனம் செய்து கல்லாகட்டி வந்த நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்தவர் ஜஹாங்கீர் பாஷா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவேற்காடு நகராட்சிக்கு கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். வந்த நாள் முதல் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஜி எஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை சார்ந்த குருநாதன் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்த பணி தருவதாக வாக்குறுதி அளித்த ஜஹாங்கீர் பாஷா சொன்னதைப் போல நடந்து கொள்ளவில்லை. அது தவிர ஒரு வேலை நடந்தால் வேலைக்கான மொத்த தொகையை காட்டிலும் கூடுதலாக சில லட்சங்கள் சேர்த்து பில் போட்டு தருமாறு கட்டாயப்படுத்தி வந்தார் அதை ஏற்காத குருநாதன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணம் கேட்டு பலமுறை ஆடியோ மெசேஜ் அனுப்பி இருந்தார். ஜஹாங்கீர் பாஷாவை கண்டித்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தது.
ஆனால் ஜஹாங்கீர் பாஷா குருநாதனுக்கு தரவேண்டிய பணத்தை திருப்பி தரவில்லை அதேபோல மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க எந்த விதமான வேலைகளும் செய்யவில்லை. இந்த நிலையில் ஆளுங்கட்சி விஐபி ஒருவர் துணையுடன் இவர் அசைக்க முடியாத ஆளாக இருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
கட்டிங், செட்டிங், திருவேற்காடு நகராட்சி கமிஷ்னரின் பித்தலாட்டம் முகத்திரையை கிழித்த ஒப்பந்ததாரர்.
இது தொடர்பாக நாம் நமது சென்னை ரிப்போட்டர்ஸ்.காம் இணையதளத்தில் செய்தி டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி செய்தி வெளியிட்டியிருந்தோம். 10 லட்ச ரூபாய் பணம் பெற்ற குற்றச்சாட்டு குறித்து ஜஹாங்கீர் பாஷாவுடைய கருத்து அறிய நாம் முயன்றும் அவர் அவரது தரப்பு கருத்தை தெரிவிக்கவில்லை. நடந்த விபரம் குறித்து ஜி.எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குருநாதனிடம் கேட்டோம் அவர் சொன்ன தகவல்களை செய்தியாக நாம் பதிவு செய்து வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் ஜகாங்கீர் பாஷா அமைச்சர் கே.என் நேருக்கு லஞ்சமாக அறுபது லட்ச ரூபாய் பணம் கொடுத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி எடுக்காமல் போக மாட்டேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது எனக்கு பக்க பலமாக அமைச்சரின் தனி உதவியாளர் ஆர்.டி.எம் சித்ரா மற்றும் முக்கிய அதிகாரிகள் எனக்கு துணையாக இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்ததாக குருநாதன் நம்மிடம் சொன்னார்.
இந்த நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை தேனி மாவட்டத்திற்கு மாற்றி அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். ஜகாங்கீர் பாஷா மாற்றப்பட்டது குறித்து திருவேற்காடு நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சந்தோஷத்தில் இருப்பதாக தெரிவித்தனர். சிலர் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்ததாகவும் சொல்லுகிறார்கள். பணி மாற்றம் உத்தரவு வந்தவுடன் குருநாதனுக்கு தர வேண்டிய பணத்தை இன்னும் கூட தராமல் ஜஹாங்கீர் பாஷா இழுத்தடித்து வருவதாக சொல்கிறார் குருநாதன்.தான் வேலை செய்ய செல்லும் இடமெல்லாம் பணம், பணம் என்று அலையும் பண பேயாக இருக்கிறார் ஜஹாங்கீர் பாஷா என்கிறார்கள் திருவேற்காடு நகராட்சி ஊழியர்கள் ஜஹாங்கீர் பாஷா கடந்த எட்டு மாதத்தில் சில கோடிகளை சம்பாதித்து விட்டார் என்று வெளிப்படையாக சொல்லுகிறார்கள் ஆளும் கட்சியினர். ஆளும் கட்சியினரை ஆதரித்து அரவணைத்து செல்லாமல் தான் தோன்றித்தனமாக வேலை செய்யும் அதிகாரிகளை தற்போது தான் அமைச்சர் மாற்றி இருக்கிறார் இது போன்ற அதிகாரிகளை முதலில் ஒழுங்குபடுத்தினால் நிர்வாகம் சீரடையும் என்கின்றனர் திருவேற்காடு நகராட்சி திமுக கவுன்சிலர்கள்.