chennireporters.com

சாதி வெறி தாக்குதல் காயம் அடைந்த வரை மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர்.

சாதிய வன்மத்தோடு தாக்கியதில் காயம் அடைந்த இளைஞரை மிரட்டிய காவல்துறையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் தெற்கு நடுவிக் கோட்டை கிராம ஊராட்சியில் செங்கல் கால்வாயில் வேலை பார்த்த ஜெகநாதன் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த வரை தெ.நடுவிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உடன் சென்று எங்கள் கோவிலில் எப்படிடா கீழ் சாதி நாய் உள்ளே வருவாய் என கேட்டு தாக்கியதாக செய்தி கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக விசாரணை குழு கலத்தில் இறங்கினோம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் முத்துராமலிங்க பூபதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வீரையா தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை தலைவர் இரா.வேணுகோபால் சிறுபான்மை நிலைக்குழு செயலாளர் கருப்புசாமி இந்திய தொழில் சங்க மையத்தின் பொறுப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்ததில் நடந்த சம்பவங்கள் உண்மை என தெரிகிறது.

குறிப்பாக தாக்குதலுக்கு உள்ளான ஜெகநாதனுக்கு முதல் உதவி செய்ய முதலில் மறுத்த
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வழக்கு பதிய மறுத்த நாச்சியார்புரம் காவல்துறை அதிகாரி ஆகியோர் பிரச்சினை கை மீறி போவதை உணர்ந்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதில் மருத்துவமனையில் இருந்த ஜெகநாதனை தொலைபேசியில் அழைத்து
வந்து சிஎஸ்ஆர் வாங்கி போ என்று கூறி மருத்துவமனையில் இருந்து வந்த ஜெகநாதனை மிரட்டி டேய் ஒழுங்க கேஸ்சை வாபஸ் வாங்கிக் கொண்டு ஓடு எனக்கு 5000 ம் பணம்
ஸ்டேஷனுக்கு 5000 ம் கொடு உன் மீது கேஸ் இல்லாமல் செய்கிறோம் என
புகார் கொடுத்த ஜெகநாதனை மிரட்டி உள்ளார்.

கருப்பையா என்ற சப்இன்ஸ்பெக்டர் (எச்சை நாயி) எதிர் தரப்பில் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம்  லஞ்சம் பெற்றுக் கொண்டு புகார் தாரரை மிரட்டி உள்ளார். மனம் நொந்து போன ஜெகநாதன் தனக்கு நீதி கிடைக்காத நிலையில் தற்கொலைக்கு முயன்று பூச்சி மருந்து குடித்துள்ளார்.

அதன் பிறகு ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மீது வழக்கு பதிய பட்டு உள்ளது இப்போது காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

 

ஜெகநாதன் உண்மையை மறைத்து தவறுக்கு துணை போன காவலர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் சம்மந்தப்பட்ட சாதி ஆதிக்க வாதிகளை கைது செய்யவும் மனமும் உடலும் பாதிக்கப்பட்டு உள்ள ஜெகநாதனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவகங்கை மாவட்ட குழு கோரிக்கை வைக்கிறது.

ஜெகநாதன் வாக்கு மூலமும் பதிவிட்டு உள்ளோம் தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே உடனடியாக நடவடிக்கை எடு இவன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவகங்கை மாவட்ட குழு  அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க.!