சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது.
மளையாளப்பட்டி கிராமத்திலுள்ள சோதனை சாவடியில் இருந்த ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் விளைவாக ஆத்திரமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் என்பவர் படுகாயம் அடைந்து சாலையில் விழுந்தார்.
இந்நிலையில் அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த துயர செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் முருகேசன் அவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து இருந்தார்.
அது தவிர அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இச்சம்பவத்துக்கு காரணமான ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.