Chennai Reporters

சவுக்கு சங்கருக்கு மீண்டும் காப்பு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மீது மீண்டும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் சவுக்கு சங்கர் பேசியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் புகழேந்தி ஆகிய அமர்வு உத்தரவிட்டது.

இதை அடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறை தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும் வரை வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. 

இதை அடுத்து சவுக்கு சங்கர் என்று விடுதலை ஆவார் என்று கருதப்பட்டது.  ஆனால் அவர் மீது சென்னை மத்திய குற்ற பிரிவு சைபர் க்ரைம் போலீசார்  நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளில் மீண்டும் கைது செய்தது.  சவுக்கு சங்கரை கைது செய்வதற்கான ஆவணங்களை கடலூர் மத்திய சிறையில் போலீசார்  அவருக்கு நேற்று வழங்கினர். இது தொடர்பாக அவரது அம்மாவிற்கும் போலீசார் தகவல் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!