chennireporters.com

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவது ஏன்?.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கனகம்மாசத்திரம், ராமஞ்சேரி,கடம்பத்தூர், புல்லரம்பாக்கம்,மப்பேடு, ஊத்துக்கோட்டை கும்முடிபூண்டி, கவரப்பேட்டை, பெரியபாளையம், செவ்வாப்பேட்டை, போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேப்பம்பட்டில் பிரபல கஞ்சா வியாபாரி மூலம் மொத்தமாக ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிவந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி புளியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக திருவள்ளூர் ஏரிக்கரையில் கஞ்சா விற்பவர் பெயர் தெரியவில்லை அவர் பெயர் திருவள்ளூர் டவுன் போலீசாருக்கும் டவுன் போலீஸ் பணியாற்றிவரும் தனிப்பிரிவு போலீஸாருக்கு மட்டுமே தெரியும்.

மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறதுஅவரிடமிருந்து திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.

ஐயப்பனி டமிருந்து புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரில் சின்னா என்பவரின் மகன் கிஷோர் புல்லரம்பாக்கத்தை சேர்ந்த முருகன், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த கொண்டையா மகன் பேதுரு என்கிற பீட்டர்,  ஆகியோர் கஞ்சாவை சில்லறை வியாபாரம் செய்தும் அவர்களும் புகைத்து வருகின்றனர்.

இதுதவிர புல்லரம்பாக்கத்தில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேற்படி கஞ்சா வியாபாரிகளிடமிருந்து திருவள்ளூர் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரும் சிறப்பு (sbcid) உளவுப்பிரிவு போலீசாரும் மாதாமாதம் டொனேஷன் பெற்று
வருகின்றனர்.

இது தவிர உள்ளூர் காவல் நிலையங்களுக்கும் மேற்படி கஞ்சா வியாபாரிகள் காவல் நிலையத்தில் சிறப்பு செலவிற்கு பணம் கட்டி வருகின்றனர்.

தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு கஞ்சா விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அது போன்று யாரும் கஞ்சாவை வைத்திருப்பதும் இல்லை விற்பதும் இல்லை என்பதைப்போல காவல்துறையினர் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றி பொதுமக்கள் எஸ்.பி.க்கு தகவல் அளித்தால் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண் குமாருடன் தேநீர் அருந்தலாம் என்று விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றி எஸ்.பி. வருண்குமாரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு மூத்த செய்தியாளர் புகார் அளித்திருக்கிறார் .அந்த புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுதவிர எஸ்.பி. வருண்குமாரை தொடர்புகொள்ள 6379904848 என்ற எண் தரப்பட்டுள்ளது.

ஆனால் அந்த எண்ணில் பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் தொடர்பு கொண்டால் எஸ்.பி. வருண்குமார் பேசமாட்டார் .

அவரின் உதவி காவலர் ஒருவர் பேசுவார்.அவரிடம் என்ன புகாரோ அதை சொன்னால் நடவடிக்கை எடுப்பதாக சொல்வார் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எஸ்.பி.வருண்குமாரிடம் பொதுமக்கள் நேரடியாக தொடர்புகொள்ள அவரிடம் பேச எந்தவித செல்போன் நம்பரும் மாவட்ட காவல்துறை அலுவலகமோ அல்லது மாவட்ட காவல்துறை அலுவலரான வருண் குமாரோ வழங்கியதில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவது குறித்து சவுக்கு சங்கர் என்பவர் தலையங்கம் என்கிற யூடியூப் சேனலில் நேரடியாக குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தி இருக்கிறார்.

(video credits thalayangam)  இந்த குற்றச்சாட்டு குறித்து எஸ்பி வருண்குமார் விளக்கம் அளிப்பாரா?இல்லை, கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யாமல் பொதுமக்கள் புகார் கொடுக்கும் வரை காத்திருந்து அவர்களுக்கு தேனீர் விருந்து அளிப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க.!