chennireporters.com

பாசத்தில் மனிதர்களையே மிஞ்சும் செல்லப்பிராணிகள். ஆகஸ்ட் 26 தேசிய நாய் வளர்ப்பு தினம்.

உலக நாடுகளில் முழுவதும் உள்ள பாதுகாப்பு மற்றும் காவல் துறைகளில் முக்கியமான பங்கு வகிப்பது நாய்கள் தான் குற்றச்சன்பங்களை மிக விரைவில் கண்டுபிடிக்கும் திறன் பெற்றுள்ளது நாய்கள் நாய்களில் பலவித வகைகள் இருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய்களுக்கு மவுசு அதிகம்.

அதேபோல காவல்துறையில் முக்கிய பங்கு வகிப்பது ஜெர்மன் ஷெப்பர்ட் இந்த நாய்கள் தான் துப்பறிவதிகள் அசாத்திய திறமை பெற்றது. அது தவிர வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவது பொமேரியன், ஜெர்மன் ஷெப்பர்ட், லேப், சிப்பிப்பாறை போன்ற நாய்கள் முக்கிய பங்காற்றும். இந்த நாய்களைத் தான் பெரும்பாலும் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். இவர்கள் மனித உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி மனிதர்களுக்கு உள்ள எல்லா பண்புகளுடனும் இந்த செல்லப்பிராணிகள் இணைந்து இருக்கும் சிறப்பு பெற்றது.

பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே.
பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டி விட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளைப் போல் கோபித்துக் கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதைக் காண முடியும்.

அதே சமயத்தில் தனது எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ரத்த சொந்தங்கள் போல் துடிக்கும் இந்த ஜீவனை விட உலகத்தில் வேறு  எந்த உயிரினங்களிடத்திலும் காண முடியாது. அதனால் தான் பல வீடுகளில் பெட்ரூம் வரை முன் அனுமதி பெறாமல் வந்து செல்லும் உரிமையைப் பெற்ற செல்லபிராணிகளாக மாறியுள்ளது.

செல்லப்பிராணி என்றாலும் நாய் வளர்ப்பு என்பது ஒரு கலை. பாலூட்டிகளில் மிக அறிவார்ந்த பிராணி நாய் தான். அதன் குணாதிசயங்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வளர்த்தால் போதும். அந்த ஜீவன் எல்லா வகையிலும் மனித இனத்திற்கு காலம் முழுவதும் துணையாக இருக்கக் கூடியவை.

இதையும் படிங்க.!