chennireporters.com

அம்பேத்கரை அவதூறாக பேசிய கிழட்டு சங்கி சமூக விரோதி மணியன் கைது.

அம்பேத்பர் பற்றி அவதூறாக பேசிய ஆர்பிவிஎஸ் மணியன் என்கிற கிழட்டு சங்கி சமூக விரோதி செப்டம்பர் 14ம் தேதி விடியற்காலையில் கைது செய்யப்பட்டார்.  தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அறிவால ஏந்தி வெட்டிக்கொண்டு சாகலாமே தவிர முஸ்லிமாக மதம் மாறிவிடக்கூடாது என விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆர்பிபிஎஸ் மணியன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் அவர் பேசுகையில் அரசியலமைப்பை உருவாக்கியது ராஜேந்திர பிரசாத் என்று சொல்ல வேண்டும்  அங்கு டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்தவன், டைப்படிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன் தான் அம்பேத்கார் தன் மூளையிலிருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கும் சொல்லவில்லை அக்ரகாரங்களில் பிராமணர்கள் இருப்பதாகவும் அங்கு துலுக்கர்கள் இருப்பதாகவும் இங்கு காலனி மக்கள் உள்ளதாகவும் சொல்வார்கள் காலணி ஆட்களுக்கு பெயர் கூட கிடையாது.

எந்த காலனியில் இருந்து யார் ஒட்டிக்கொண்டு வந்தார்கள் என யாருக்குமே தெரியாது அவர்களையே பட்டியல் சமூகம் என சொல்கிறோம் திருவள்ளுவர் என்று ஒரு நபரே கிடையாது அப்படி ஒருவர் இருந்தார் என சொல்வதே கற்பனை திருவள்ளுவர் திருக்குறள் என யாரோ ஒருவர் சொல்லிவிட்டார்.அந்த நபர் தான் திருக்குறளை எழுதினால் என்ன சொல்வது கற்பனை கதை திருவள்ளுவர் அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் பட்டியல் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரை இழிவாகப் பேசிய மனியினின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. இதற்கே பலரும் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை தெரிவித்தனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் ஒரு சிலர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதற்காக மணியன் இன்று விடியற்காலை கைது செய்யப்பட்டார். அவர் பேசிய இன்னொரு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் நேற்று எந்த தேவேந்திர குல வேளாளரை அறிவாளை வைத்துக் கொண்டு மிரட்டினானோ இன்று அவன் முஸ்லிமாக மாறியவுடன் அவன் அரிவாள் வைத்துள்ள கை நடுங்குகிறது.

நான் இதே இராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் ஏற்கனவே ஒரு முறை பேசியிருக்கிறேன். உங்கள் முன் மட்டும் தான் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் ராமநாதபுரத்தில் இருப்பவரிடம் கேட்டேன் ஏண்டா நீ முஸ்லிமாகப் போகிறாய் முஸ்லிமாக போவதால் என்ன பிரச்சனை இந்துவாக நில் உன்னை அடிக்க வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.எவனோ ஒருத்தன் தானே உயிரோடு இருக்கப் போகிறான் ஒன்னு அவன் இருப்பான் இல்லை நீ இருப்பாய் என்று பேசியிருக்கிறார் இந்த பேச்சு கூலிக்கு கொலை செய்யும் கூலிப்படை தலைவனைப் போல பேசியிருக்கிறார் மணியன்.

ஆனால் ஏதோ ஒன்று தானே முடிவு. நீ வெட்டுவதற்கு கற்றுக்கொள் உன் கையால் அறிவாள் தூக்க முடியாதா தூக்கு விடாதே ஆனால் அதற்காக பயந்து கொண்டு முஸ்லிமாக மாறிவிடாதே இந்து முஸ்லிம்களாக போனவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு கிடைத்திருக்கிறது என்று பேசி இருக்கிறார். பாஜக மற்றும் விஎச்பி போன்ற இந்துத்துவ அமைப்புகள் மணியன் சிறப்பாக பேசி இருக்கிறார் என்று பாராட்டி வரும் நிலையில் எக்ஸ் பக்கத்தில் மற்றும் சமூக வலைதளங்களில் ஆர்பி எஸ் மணியனை சொல்லக்கூடாத வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக பாஜக அரசு தற்போது ஆட்சி செய்து வரும் நிலையில் மோடி என்ன நினைத்தாலும் சாதித்துக் காட்டும் திறமையும் கட்சியின் பலமும் இருக்கிறது. அப்படி இருக்கிற நிலையில் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை நீக்கிவிட்டு மணியன் போன்ற அல்லது இந்தியாவில் திறமை வாய்ந்த சங்கிகளை யாரையாவது வைத்து  புதிய அரசியல் சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப்படுத்த  வேண்டியதுதானே என்கின்றனர் நெட்டிசன்கள். ஒரு சிலரோ அந்த அளவுக்கு அறிவு இருந்தால் தீண்டத்தகாதவன் பின்தங்கிய சமூகம் என்று சொல்லுகிற அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர் என கடும் சொற்களால் கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் படிங்க.!