chennireporters.com

லஞ்சம் வாங்குவதில் நம்பர் 1 ஒத்துக்கொண்ட நகராட்சி ஊழியர்கள். அவமானத்தால் தலைகுனிந்த அதிகாரிகள்..

லஞ்சம் வாங்கவில்லை என்று  ஒருவராவது சொல்லுங்க நான் உங்கள் காலில் விழுகிறேன் என்று திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனை வருட அரசு பணியில் லஞ்சம் வாங்கவில்லை என யாராவது ஒருவர் கூறுங்கள் என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி கேட்டதற்கு ஒருவர் கூட பதில் சொல்லாமல் இருந்தனர்.

அப்படி என்றால் நீங்கள் வஞ்சம் வாங்குவதில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறீர்களா என கேட்டதற்கு ஒருவரும் பதில் சொல்லாமல் அவமானத்தால் வெட்கி தலை குனிந்தனர். இதனால்   திருவள்ளூரில் நகராட்சி அலுவலகம் முழுவதும்  மூச்சு பேச்சு இல்லாமல் மாரடைப்பு வந்த மாதிரி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைதியாக இருந்தனர்.

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் நவம்பர் ஐந்தாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு குறித்து அறிவுரைகள் கூறி உறுதிமொழி ஏற்றனர்.


அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பேசிய திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி, ஊழல் அதிகமுள்ள 185 நாடுகள் பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எந்த துறையில் ஊழல் அதிகமாக உள்ளது என கூறுங்கள் என ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு ஆர்.டி.ஓ அலுவலகம் என அவர்கள் பதில் அளித்த நிலையில், ஊழல் இல்லாமல் ஒருதுறையும் இல்லை எனவும், “இத்தனை வருட அரசு பணியில் லஞ்சம் வாங்கவில்லை என யாராவது ஒருவர் கூறுங்கள். நான் உங்கள் காலில் விழுகிறேன்” எனவும் கூறினார் ஆய்வாளர் தமிழரசி. அவர் தெரிவித்ததற்கு ஒரு அரசு அதிகாரி கூட பதில் கூறாமல் மெளனம் காத்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த இன்ஸ்பெக்டருக்கு வேலை வெட்டி இல்லை பி.டி.ஒ ஆபிஸ், நெடுஞ்சாலைத்துறை, கனிமவளத்துறை, டாஸ்மாக் ,பொதுப்பணித்துறை ,தாலுகா ஆபிஸ்  போன்ற அலுவலகங்களில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் லஞ்ச பணம் புரளுகிறது. அந்த அலுவலங்களில் சென்று அறிவுரை வழங்காமல் ஏதோ தினமும் 1000க்கும் 500க்கும் மாரடிக்கும் நம்மை வந்து அசிங்கப்படுத்தி விட்டார் என்று அதிகாரிகள் முணுமுணுத்த கதை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒவ்வொருவரும் மூன்று முறைக்கு மேல் டீ குடித்தனராம். சில ஆண் அதிகாரிகள் 6:00 மணிக்கே டாஸ்மாக் பக்கம் போய் விட்டதாக சொல்கிறார்கள் சில அலுவலக ஊழியர்கள். இன்ஸ்பெக்டர் தமிழரசி திருவள்ளூரில் உள்ள அனைத்து அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். 

இதையும் படிங்க.!