ஊழலை ஒழிப்பதாக பொய் சொல்லி ஊழல் ஒழிப்பு சட்டங்களை ஒழித்து வரும் மத்திய பாஜக அரசு. இந்த செயல் கண்டிக்க தக்கது என்று அறப்போர் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஒரு அரசு ஊழியர் மீதுள்ள ஊழல் புகாரை விசாரிக்க அந்த ஊழியர் பணிபுரியும் துறையின் உயர் அதிகாரி அனுமதி வழங்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்கள். சரி அந்த உயர் அதிகாரியே அந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் எப்படி அனுமதி வழங்குவார் என்ற கேள்விக்கு கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். இந்த சட்ட திருத்தத்தால் பல ஊழல், அரசு ஊழியர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஊழல் செய்து தப்பித்துள்ளார்கள் தற்போது வரை தப்பித்தும் வருகிறார்கள்.அடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தனிநபர் தகவல்கள் எதையும் தர வேண்டிய அவசியம் இல்லை என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர இருக்கிறார்கள். பொது நலன் சம்பந்தப்பட்ட தகவலாக இருக்கும் பட்சத்தில் தனி நபர் தகவல்களை தரலாம் என்ற RTI சட்டத்தின் விதியை திருத்தம் செய்து அதன் மூலம் இனி பல தகவல்களை தனி நபர் தகவல் என்ற போர்வையில் மறுக்க வழி வகை செய்துள்ளார்கள்.உண்மையில் ஊழலை ஒழிக்கும் எண்ணமிருந்தால் டெல்லிக்கு நடைபயணம் சென்று பிரதமர் மோடியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டாம் என்று கோரிக்க வையுங்கள். என்று அறப்போர் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.