chennireporters.com

#arakkonam dmk mp கல்லா கட்டும் அரக்கோணம் தொகுதி உடன்பிறப்புக்கள்; புலம்பும் பொது மக்கள்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்திற்கு வரும் பெண்களுக்கு வழங்கப்படும் பணத்தில் உடன் பிறப்புக்கள் சிலர் பங்கு போட்டுக்கொள்கின்றனர் இதனால் பெண்கள் மத்தியில் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன், பாஜக கூட்டணி சார்பில் வழக்கறிஞர் பாலுவும் போட்டியிடுகின்றனர். இதில் ஏற்கனவே ஜெகத்ரட்சகன் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவர் வன்னிய சமூகத்தை சார்ந்தவர் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாலு தொகுதிக்கு புதிய முகம், அது மட்டுமல்லாமல் அறிமுகமும் இல்லாதவர். அவரும் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர். இருப்பினும் ஜெகத்ரட்சகன் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை.  என்கிற குற்றச்சாட்டு எழ்ந்துள்ளது. அரக்கோணம் பேருந்து நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை, அரக்கோணம் ரயில் நிலையம் ஆகியவற்றை தரம் உயர்த்தப்படும் என்று  கடந்த 19 ம் ஆண்டு நடை பெற்ற லோக்சபா தேர்தலில் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த போது கூறி இருந்தார்.

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து பெரிய ரயில் நிலையமாக கருதப்படுவது அரக்கோணம் தான். இந்த அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஐந்தாவது நடை மேடையில் மட்டுமே கழிவறை உள்ளது அதுவும் கட்டண கழிப்பிடமாக இருக்கிறது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் எந்த வித அடிப்படை தேவைகளையும் ஏற்படுத்தி தராத ஜெகத்ரட்சகன் மீண்டும் மக்களை முட்டாளாக்கும் முயற்ச்சியில் இறங்கி உள்ளார் என்கின்றனர் மூத்த உடன் பிறப்புக்கள்.

ஜெகத்ரட்சகன்.

ஆனால் அரக்கோணம் தொகுதிக்கு ஜெகத்ரட்சகன் தெரிந்த பெயராக இருக்கிறதே தவிர தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால் இந்த முறை வெற்றி பெறுவதில் பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஆற்காடு, திருத்தணி, சோளிங்கர், அரக்கோணம், காட்பாடி, ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெண்களை திரட்டும் பணியில் உள்ளூர் உடன்பிறப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். 

கூட்டத்திற்கு வரும் ஒரு பெண்களுக்கு அதாவது ஒரு தலைக்கு 500 ரூபாய் விதம் ஜெகத்ரட்சகன் தரப்பினர் தருகின்றனர் ஆனால் உள்ளூர் உடன்பிறப்புகளோ ஒரு தலைக்கு இருநூறு ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு மீதி 300 ரூபாயை அடித்து விடுகின்றனர் என்கின்றனர் பெண்கள். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில்  ஏகப்பட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில்  ஏழ்மை நிலையில் இருக்கிற பல பெண்களுக்கு அந்த உரிமை தொகை வழங்கப்படுவதில்லை. அது தவிர முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வராமல் வசதி வாய்ப்பு உள்ளவர்களே பெரும்பாலும் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த முறை ஜெகத்ரட்சகன் எளிதில் வெற்றி பெறுவது முடியாத காரியம் என்கின்றனர் உள்ளூர் திமுகவினர். எனவே தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் தலைக்கு 500 ரூபாய் கொடுக்கும் பணத்தையாவது ஒழுங்காக தர வேண்டும் என்று ஜகத்ரட்சகன் தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட வேண்டும் என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.  தாலிக்கு தங்கம் செய்தால் கூட தட்டான் ஒரு தம்படி எடுத்துக் கொள்வான் என்கிற பழமொழிக்கு ஏற்ப திமுக வேட்காளர் கொடுக்கும் பணத்தை ஒழுங்காக தராமல் அவர்கள் தலைக்கு 300 வீதம் எடுத்துக் கொள்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகத்ரட்சகன்.

தாம்பரம் துணை துணை மேயர் காமராஜ் அரக்கோணம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் உறவினர் இவர் தான் பத்திரிகையாளர்களுக்கு  கவர் கொடுப்பது அதாவது விளம்பர கவர் , டீசல் , பெட்ரோல், சாப்பாடு செலவு கூட்டணி கட்சியினர் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருபவர்களுக்கு பணப்பட்டுவாடா என அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்பவர். அவரையே ஏமாற்றி விடுகின்றனர் உபிக்கள்.

ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்கிற திமுக பிரமுகர் தான் திமுக பிரச்சாரத்திற்கு பெண்களை அழைத்து வரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் காரை, புளியங்கண்ணு ,அவரக்கரை, தெங்காள் போன்ற பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வருகின்றார் தலை ஒருவருக்கு 500 ரூபாய் என்று தலைமை கொடுத்தாலும் இவர் 200 ரூபாய் மட்டுமே தருகிறாராம் ரவி.  ரவிக்கு வேண்டப்படாத ஒரு சிலர் 500 ரூபாய் உங்களுக்கு தர சொல்லி இருக்கிறார் நீங்கள் கேளுங்கள் என்று பெண்களை  தூண்டிவிடுகின்றனர்.

இதனால் ஜகத் ரட்சகன் மீது திமுகவை சேர்ந்த பெண்களே கோபத்தில் உள்ளனர். மக்களுக்கு சேர வேண்டிய பணப்பட்டுவாடாவில் கொள்ளை அடிக்கும் உடன்பிறப்புகள் மீது ஜெகத்ரட்சகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தொகுதி  உடன்பிறப்புகள் சிலர்.

இதையும் படிங்க.!