சென்னை முகப்பேரில் மீன் கடைக்குள் உள்ளே சென்ற ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் மீன் வியாபாரியை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோலவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(48) சென்னை நொளம்பூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஜே.கே என்ற மீன் கடையை நடத்தி வருகிறார்.
இவர் மீன் கடையில் இருந்த போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அப்போது ஜெகன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பி ஓட முயற்சித்த போது மர்ம கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று ஜெகனை சாலையிலே வைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.மேலும் ரத்த வெள்ளத்தில் ஜெகன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நொளம்பூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் நடத்திய விசாரணையில்.. திருவாரூர் மாவட்டம் கோவிலூர் பகுதியில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறால் அடுத்தடுத்து கொலை சம்பவம் நடந்துள்ளது. தற்போது கொலை செய்யப்பட்ட ஜெகனுக்கும் அந்த பகுதியில் உள்ள ஒன்றிய கவுன்சிலராக இருந்த ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலையில் இவருக்கு தொடர்பு உள்ளது. இவர் மீது கொலை வழக்கும் பதிவு நெய்யப்பட்டுள்ளது.ராஜேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் திருவாரூரில் இருந்து பட்டா கத்திகளுடன் வந்த கும்பல் மீன் கடை உரிமையாளர் ஜெகனை காத்திருந்து பழிக்கு பழி கொலை செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.மேலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மீன் கடை உரிமையாளர் ஓட ஓட விரட்டி, விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் அமமுக நிர்வாகி என்பதும் அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் டி.டி.வி. தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. அவருடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.