chennireporters.com

எடப்பாடி பெயரில் போலி அறிக்கை இது யார் பார்த்த வேலை.

அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் சூட்டை கிளப்பிய போலி  நியமன அறிக்கையை கண்டு புலம்பித் தள்ளிய செய்தி  தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதிமுக மாநாடு நடப்பதற்கு  ஒரு நாள் முன்னரே எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த அறிக்கையில் தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர நியமிக்கப்பட்டிருப்பதாகம் மேலும் அவருக்கு அடி பணிந்து  நடக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கான தொண்டர்களிடம் வாட்ஸ் அப்பில் வைரலானது. உண்மையாக இருக்குமோ என்று அதிமுகவின் தொண்டர்கள் வருத்தத்துடனே அந்த அறிக்கையை படிக்க ஆரம்பித்தனர் அதில் தொண்டர்கள் கட்சியினர் சவுக்கு சங்கரின் பேச்சுக்கு அடிபணிந்து என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டிருந்தது இந்தியாவில் ஆளுமை மிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த கட்சியில் அடிபணிந்து என்கிற வார்த்தை குறிப்பிட்டிருந்தது.

அது பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. கட்சியில் எந்தவித அடிப்படை உறுப்பினர் பதவியும் இல்லாத சவுக்கு சங்கருக்கு இந்த பதவியை எடப்பாடி கொடுத்தார்.  காரணம் என்ன தெரியவில்லை என்கிற கோணத்திலேயே  விசாரித்துகொண்டிருந்தனர். மாநாடு முடிந்த அடுத்த நாள் அது போலியான அறிக்கை என்று தெரியவந்தது ஆனால் சவுக்கு சங்கர் இது போன்ற தில்லாலங்கடி வேலைகள் செய்து தன்னை அந்த கட்சியினரே அந்த கட்சியில் உள்ள முக்கிய விஐபிகள் தன்னை பற்றி  பேச வைத்து விட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டக் கூடியவர்தான் என்கின்றனர்.

அதிமுகவில் தற்போது உள்ள சூழ்நிலையில் சவுக்கு சங்கர் போன்ற புல்லுருவிகளுக்கு கட்சியில் சேர்ந்தாலோ அல்லது கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டாலோ அது அதிமுகவுக்கு இன்னும் பெரிய பின்னடைவு தான் என்கின்றனர் மூத்த அரசியல்வாதிகள் இந்த அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கமெண்ட்டுகள் வெளியாகி வருகிறது.

எரிகிற வீட்டில் புடுங்குகிற வரை லாபம் என்பதைப் போல சவுக்கு சங்கரே இது போன்ற வேலைகளை செய்திருப்பார் என்றும் பிராடுகளை எல்லாம் கட்சியில் உள்ளே விட்டால் அதிமுகவுக்கு பட்டை  நாமம் தான் போட வேண்டும் என்ற கமெண்ட்களும் அடிக்கத்தான் செய்கிறார்கள் கடைசியாக முடிக்கும் போது இது யார் செய்த வேலை என்றும் எப்ட்ரா என்ற கமெண்ட்களுமே அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க.!