chennireporters.com

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தாரா தாசில்தார் மணிகண்டன்.

பொன்னேரி தாசில்தாராக இருந்த மணிகண்டன் அங்குள்ள மக்களுக்கு  வீட்டு மனையும் இலவச பட்டாவும் கொடுக்க பொது மக்களிடம் வாங்கிய பணம் சுமார் ஒரு கோடி ரூபாய் தாண்டும் என்கிறார்கள் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் நம்மை தொடர்பு கொண்டு பல புதிய தகவல்களை நம்மிடம் தெரிவித்தனர்.

பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது முன்னாள் கலெக்டர் மகேஸ்வரி பெயர் சொல்லி தாசில்தார் மணிகண்டன் ஒரு கோடி ரூபாய்க்கு மேல்  பணம் வாங்கினார் என்று புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது. 

அதை மறைப்பதற்கு பல்வேறு தரப்பினர்  மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தாசில்தார் மணிகண்டன்பல  அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லுகிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மகேஸ்வரி இவரிடம் மணிகண்டன் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் அதற்கான சம்பிரதாயங்களை உங்களுக்கு செய்து விடுவதாக கலெக்டரிடம் சொன்னதாக தெரிய வருகிறது.

ஆனால் கலெக்டர் மகேஸ்வரி வேறொரு பகுதியில் இருக்கும் மக்களை  மீஞ்சூர் பகுதியில் கொண்டு வந்து அவர்களை குடியமர்த்தி அவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என்றும் இது நடக்காத காரியம் என்றும் மணிகண்டன் விடுத்த கோரிக்கைக்கு கலெக்டர் மகேஸ்வரி நிராகரித்து விட்டதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில் மகேஸ்வரி பெயரை பயன்படுத்தி தான் தாசில்தார் மணிகண்டன் குடியிருப்போர் சங்கத் தலைவர் செல்வராஜ் இடம்  பணம் வாங்கினார். தாசில்தார் மணிகண்டன் சொன்ன  வார்த்தையை நம்பித்தான் பணம் கொடுத்த்தாக சொல்கிறார்கள் அந்த பகுதி பெண்கள்.

இந்த நிலையில் கலெக்டர் மகேஸ்வரி நிராகரித்த விஷயத்தை குடியிருப்போர் நல சங்கத் தலைவர் செல்வராஜ்க்கு தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி பணி மாறுதல் பெற்று சென்று விட்டார் மணிகண்டன் என்கிறார்கள்.

தாசில்தார் மணிகண்டனிடம்  குடியிருப்போர் சங்கத்தை சேர்ந்த செல்வராஜ் கொடுத்த பணம் ரூபாய் ஒரு கோடிக்கு மேல்  கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

ஒரு நபர் ஒன்றுக்கு 35 ஆயிரம் வீதம் 325 பேர் கொடுத்திருக்கிறார்கள் ஏறக்குறைய 325×35000= 11,375,000 அதாவது ஒரு கோடியே 13 லட்சத்து 375 ரூபாய் என்று கணக்கு சொல்லுகிறார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வழக்கறிஞர்கள் கொடுத்த அறிவுரையின்படி பணத்தை குறைத்து புகாரில் கூறியுள்ளார் என்கிறார்கள்.

செல்வராஜ்யிடம்  15 லட்சம் திருப்பிக் கொடுத்த தாசில்தார் மணிகண்டன் மீதி பணத்தை தராமல் இழுத்து அடித்ததுடன் பொதுமக்களை அவமரியாதையாக பேசி அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியது மிகப்பெரிய மன வருத்தத்தை உருவாக்கி விட்டது. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.  இந்த நிலையில் விரைவில் பணத்தை கொடுத்து விடுவதாக போலீசாரிடம் தாசில்தார் மணிகண்டன் தெரிவித்ததாக சொல்லுகிறார்கள்.

கலெக்டர் பெயரை பயன்படுத்தி அவர் பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் தாசில்தார் மணிகண்டன் நடந்து கொண்டது மிகப்பெரிய தவறான முன்னுதாரணம்  என்கின்றார்கள் வருவாய் துறை அதிகாரிகள் .

இது போன்ற அதிகாரிகள் செய்கிற  தவறுக்கு ஐஏஎஸ் அதிகாரியை பெயரை தவறாக பயன்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்கிறார்கள் வருவாய்த்துறை சங்கத்தினர்.

எரிகிற வீட்டில் பிடுங்கிறதுவரை  லாபம் என்கிற என்பதைப் போல தாசில்தான் மணிகண்டன் ஏழை அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்தது கடும் கண்டனத்திற்குரியது என்கின்றனர்.

பழங்குடி மற்றும் தலித் மக்கள் மறுவாழ்வு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் வருவாய்த்துறை செயலாளர்எளுக்கு  புகார் கடிதம் எழுதி இருப்பதாக சொல்லுகிறார்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.  இந்த புகார் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆர் பி ஜான் வர்கீஸ் எதுவும் வாய் திறக்காமல் மௌனமாய் இருப்பதற்கு காரணம் என்ன என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க.!