chennireporters.com

அதிமுக, பாஜக கூட்டணியில் பிளவு. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுக.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடை பெற உள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டு வந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணா குறித்து பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் சி.வி சண்முகம் செல்லூர் ராஜு ஆகியோர் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார். மேலும் இதுதான் தலைமையின் முடிவு என்றும் தெரிவித்தார். இதனால் அதிமுக பாஜக இடையே வார்த்தை போர் தொடர்ந்தது.  இந்த சூழ்நிலையில் பாஜக பற்றியோ கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது கருத்தும் தெரிவிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக நிர்வாகி கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அறிவித்தார்அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜகவின் மாநில தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு வேண்டுமென்று உள்நோக்கத்தோடு அதிமுக மீதும் எங்கள் கட்சி தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும் எங்களின் கொள்கை விமர்சித்து வருகிறது. மேலும் பாஜகவின் மாநில தலைமை 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுகவின் பொன் விழா எழுச்சி மாநாட்டை சிருமைப்படுத்தியும்  கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக விமர்சித்து வருகிறது.இந்த செயல் கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமை கழக செயலாளர் மற்றும் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி தொண்டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. என தெரிவித்தார்அதிமுகவின் முடிவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். நாளுக்கு நாள் அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் அதிமுக தலைமை.

 

 

 

இதையும் படிங்க.!