chennireporters.com

எடப்பாடியின் பினாமியா தி நகர் சத்யா அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை.

தி நகர் முன்னாள் எம்எல்ஏ  சத்யாவிற்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை அரசியலில் குறைந்த காலகட்டத்தில் வெகு சீக்கிரமாக வளர்ந்தவர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவர் வாழ்க்கையே செல்வ செழிப்புடன் மாறியது. தற்போதைய கட்சி தலைவர் எடப்பாடிக்கு வலதுகரமாய் செயல்பட்டவர் கூவத்தூரில் பல எம் எல் ஏ எம் எல் ஏக்களை கவனமாக எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும்படி பார்த்துக் கொண்டவர். தி நகர் சத்யா என்பவர் மிகப் பெரிய மலைக்க வைக்கும் அரசியல் பின்னணி கொண்டவர் இவரின் சொத்துக்களை முறையாக ஆய்வு செய்து விசாரித்தால் அவ்வளவு அதிர்ச்சி கலந்த உண்மைகள் தெரிய வரும் என்கிறார்கள் சத்யாவின் எதிரணி நண்பர்கள்.

அ.தி.மு.க தென்சென்னை வட மேற்கு மாவட்டச் செயலாளர் சத்ய நாராயணன் என்ற தி.நகர் சத்யா, 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தி.நகர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது, அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பை குறைத்து காட்டி அதாவது  2 கோடியே 78 லட்சம் ரூபாய் எனத் தெரிவித்திருந்தார். சொத்து மதிப்பை மறைத்து சத்யா தேர்தலில் போட்டியிட்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தாக்‌ஷன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.அதன்படி, அவர்மீது செப்.12-ம் தேதி வழக்கு பதிவுசெய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. அதில், வருமானத்துக்கு அதிகமாக 16.33 சதவிகிதம் அளவுக்குச் சொத்துகளைக் குவித்ததாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், சத்யாவின் சொத்து மதிப்பு கணக்கிட்டதைவிட அதிகமாக இருக்கும் என்று எண்ணிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சென்னை வடபழனியிலுள்ள அவரது வீடு உள்ளிட்ட 22 இடங்களில்  அதிகாலை முதல் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் நிற்க சீட் கிடைத்து, வெற்றியும் பெறுகிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் என்பதால், அமைச்சரின் உதவியோடு சென்னை மாநகராட்சிப் பணிகளில் புகுந்து விளையாடினார்.

2006 வரை சைக்கிள் கடை வந்த சத்யாவின் தற்போதைய சொத்து மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அவரின் மெயின் தொழிலே ரியல் எஸ்டேட், சூதாட்ட கிளப், செம்மர கடத்தல், போன்ற தொழிகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளார். தற்போது கூட சுரேஷ் என்பவரை வைத்து தி.நகரில் சக்தி ரெக்கரேஸன் கிளப் நடத்தி வருகிறார். இந்த கிளப்பில் நாள் ஒன்றுக்கு பத்து வட்சத்திற்கு மேல் கல்லா கட்டுகிறார்களாம்.தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவடைந்த பிறகு, சத்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதைப் பொறுத்தே சத்யா மீது என்ன  நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவரும்.

இதையும் படிங்க.!