நாளுக்கு நாள் போலி பாதிரியார்கள் அதிகரித்து வருகிறார்கள். விரும்பத்தகாத பல சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் இயேசு உங்களை அழைக்கிறார். இயேசுவை நேசியுங்கள் ஜெபம் பண்ணுங்கள் உங்களை இரட்சிப்பார் என்றெல்லாம் துண்டறிக்கை கொடுத்து மத மாற்றம் செய்ய வற்புறுத்துவதாக பாஜக மற்றும் இந்துத்துவா கட்சிகள் பலர் குற்றம் சாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈக்காடு கிராமத்தில் கல்யாணி ஏரி என்கிற ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மழை காலங்களில் ஏரி முழுவதும் நிரம்பினால் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு வெள்ள நீர் சென்றால் பெரும் சேதம் ஏற்படும். இந்த நிலையில் இந்த கல்யாணி ஏரியின் கரையோர பகுதிகளை பல பேர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர்.
அவர்கள் தற்போது அந்த இடங்களை வெளிநபர்களுக்கு பல லட்ச ரூபாய் அளவிற்கு அரசு ஏறிப் புறம்போக்கு நிலத்தை விற்று விடுகின்றனர். நிலத்தை வாங்குகிறவர்கள் பெரும்பாலும் பெந்தகோஸ்து என்கிற கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் திருவள்ளூர் பூங்கா நகர், காக்கலூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு என பல்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.
அந்த சபைகளில் யாராவது இறந்து போனால் இறந்த உடல்களை எடுத்து வந்து ஈக்காடு கிராமத்தில் உள்ள இந்த கல்யாணி ஏரியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதைத்து கல்லறை கட்டி வருகின்றனர். இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட வெளியூர் பகுதிகளை சேர்ந்த இறந்தவர்களின் உடல்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து ஈக்காடு கிராம பஞ்சாயத்து தலைவர் லாசனா சத்தியா எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அரசு ஏரி புறம்போக்கு நிலத்தை விற்பவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏன் என்றால் லாசனா சத்தியாவும் கிருஸ்த்துவராக இருப்பதால் கிருஸ்த்தவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.
அது தவிர லாசனாவின் கணவர் சத்யாவும் பல பேருக்கு அதாவது பல பாதிரியார்களுக்கு இடத்தை பணம் வாங்கிக்கொண்டு விற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் அரசு வருவாய் துறை செயலாளருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் பணியாற்றிய பூங்கொடி என்கிற கிராம நிர்வாக அலுவலர் அரசு விதிகளுக்கு எதிராக புறம்போக்கு நிலத்திற்கு பீம் நோட்டீஸ் மற்றும் வரி ரசீதும் போட்டு தந்ததாக குற்றம் சாட்டுகின்றனர் பொது மக்கள்.
விஏஓ பூங்கொடி இப்படி பல லட்ச ரூபாய் லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு பலருக்கு பட்டா வழங்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கல்யாணி ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கல்லறை கட்டுபவர்கள் மீதும் அரசு ஏரி புறம்போக்கு நிலத்தை விற்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.
இந்த செய்தி குறித்து ஈக்காடு பஞ்சாயத்து தலைவர் லாசனா சத்யாவை தொடர்பு தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இந்த செய்தி தொடர்பாக அவரது கருத்தைத் தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.