சென்னையில் பல பெண்களை ஏமாற்றி சொத்து, பணம் மற்றும் பாலியல் ரீதியாக பல பெண்களை ஏமாற்றி விட்டு தலைமறைவாக இருந்த ஆனந்த் ராஜை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆலபாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்.இவர் அசோக் நகரைச் சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவரும் காதலித்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
பின்னர் காஞ்சனா பெயரில் உள்ள சொத்தை எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் காஞ்சனாவை கை கழுவி விட்டு
கவிதா என்ற பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது என் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.தன்னிடம் பணிபுரிந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தராஜை தேடி வந்தனர். போலீசார் தம்மை தேடி வருவதை அறிந்த ஆனந்ராஜ் தலைமறைவானார்.
கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை சென்னை தி.நகர் காவல் ஆணையர் ஹரிகிரன்பிரசாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனந்த ராஜ் கைது செய்யப்பட்ட செய்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அளித்துள்ளது.
தி.நகர் டி.சி.ஹரிகிரன் பிரசாத் அவர்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்களாம் .