chennireporters.com

கோவை தொண்டாமுத்தூர் பத்திர பதிவு அதிகாரி பொது மக்கள் வயிற்றில் அடித்து வாரி சுருட்டும் வாயாடி ராஜேஸ்வரி.

கோவையில் மாவட்ட தலைமைப் பத்திரப் பதிவு அலுவலகத்தின் கீழ் தொண்டாமுத்தூா், மதுக்கரை, காந்திபுரம், வடவள்ளி, கணபதி, சிங்காநல்லூா், சூலூா், அன்னூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு உள்பட 17 இடங்களில் துணைப் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் பத்திரபதிவு அலுவலகங்களில் மிக முக்கியமானது தொண்டாமுத்தூர் பத்திர பதிவு அலுவலகம் இங்கு துணை பத்திர பதிவாளராக ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு சூலூர் மற்றும் கிணத்துகடவு பகுதி பத்திரபதிவு அலுவலகத்தில் பணிபுரிந்தவர். தற்போது இவர் மீது அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

பொதுவாக அரசு அலுவலக பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் கிறிப்பாக பத்திரபதிவு துறையில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை . லஞ்சம் கொடுக்கும் தொகையை விட கூடுதலாக கேட்பதில் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாத்தையும் இழந்து பல்லிளித்து கொண்டே கேட்பார்கள். 

இதற்கு ராஜேஸ்வரி மட்டும் என்ன விதிவிலக்கா இவர் லஞ்சம் வாங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏற்கனவே சூலூர் கிணத்துகடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் எவ்வாறு வாங்கினார் என்பது அனைவருக்கும்  தெரியும். பத்திர எழுத்தர்களுக்கும், சார் பதிவாளர் ராஜேஸ்வரிக்கும் இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தப்படி, லஞ்சம் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

பத்திர பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு! திங்கள் முதலே அமலுக்கு வருகிறது! தமிழக அரசு அறிவிப்பு | Tamilnadu govt raises service fees of Registrations from July 10 - Tamil Oneindia
‘இவர் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் பத்திரம் பதியவே முடியும்’  பத்திரம் பதிய வருவோரிடம், ராஜேஸ்வரி உத்தரவு படி பத்திர எழுத்தர்கள் முன்கூட்டியே எவ்வளவு கட்டிங் தரவேண்டும் என்று  சொல்லி விடுவார்கள். இப்படி அடித்துப்பிடுங்காத குறையாக  வாங்கிய லஞ்சம் பல கொடிகளை தாண்டும் என்கின்றனர். சொத்து விவகாரம் என்பதால், பொதுமக்கள் யாரும் புகார் சொல்ல முன்வருவதில்லை.  பதிவுத்துறையில் அடி முதல் முடி வரை, லஞ்சம் இன்றி எதுவும் நடக்காது என்ற நிலை வெளிப்படையாகி விட்டது.இது குறித்து
பத்திர எழுத்தர் ஒருவர் கூறியதாவது:

Read all Latest Updates on and about லஞ்ச ஒழிப்பு போலீசார்

பத்திரப்பதிவு துறையை பொறுத்தவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பெறுகின்ற லஞ்சம் உயரதிகாரிகள் வரை செல்கின்றது. இதனால் யாரையும் யாரும் கண்டு கொள்வதில்லை. பதிவுதுறையில் லஞ்சம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்றார். பத்திர பதிவு துறையில் எப்படி  லஞ்சம்  வாங்கப்படுகிறது என பார்கலாம்.  பத்திரப் பதிவு, பட்டா பெறுதல், வீட்டு மனைக்கான அப்ரூவல் இந்த 3 விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். நிலம் வாங்குதல், வீடு வாங்குதல், கட்டுதல் என்பது சாமானியர்களின் வாழ் நாள் கனவு.

ஆனால் இதற்கு அவர்கள் கொடுப்பது மிகப் பெரிய விலை. குறிப்பாக பத்திரப் பதிவு, பட்டா பெறுதல், வீட்டு மனைக்கான அப்ரூவல் இந்த 3-க்கும் மட்டுமே ஒரு சாமானியன் சுமார் ரூ1 லட்சம் வரை லஞ்சம் மட்டுமே கொடுக்கத்தான் வேண்டும் என்கிற வகையில் நமது அரசாங்கக் கட்டமைப்பு இருக்கிறது.

மகனுக்கு பெண் பார்க்க போன அமைச்சர் பி.மூர்த்தி.. ஷாக் தந்த உறவினர்கள்.. என்ன நடந்தது? | Minister P. moorthy explain rumors that his son is getting married - Tamil Oneindiaதமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி

உதாரணமாக நீங்கள் ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்கிறீர்கள் என்றால் சம்பந்தப்பட்ட இருவரும் விலையை பேசி பத்திரம் பதிவு செய்ய முடிவு செய்கிறார்கள்.
இதர அரசு அலுவலகங்களைப் போல நீங்கள் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பத்திரம் பதிவு செய்யவே முடியாது. முதலில் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே கோணி கட்டிக் கொண்டு காத்திருக்கும் பத்திரம் எழுதுபவரிடம் தான் போக வேண்டும். இந்த பத்திரம் எழுதுபவர்தான் அரசுக்கு எவ்வளவு கட்ட வேண்டும்? பத்திரம் எழுதியதற்கான கூலி எவ்வளவு? கையெழுத்து போடும் பத்திர பதிவு அரசு ஊழியர் ராஜேஸ்வரி போன்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் எவ்வளவு? என்பதை தீர்மானிப்பவராக இருக்கிறார்.


அவர் பத்திரத்தில் இடம் பெற வேண்டிய விவரங்களை டைப் செய்து கொடுக்க நாம் சரிபார்த்த பின்னர் சில ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களில் பதிவேற்றப்பட்டுவிடும். சரி பத்திரத்தை எழுதிக் கொடுத்துவிட்டார் வேலை முடிந்த து இனியாவது பத்திரபதிவாளர் ராஜேஸ்வரியிடம் சென்று நாம் நேரடியாக கையெழுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது.

பத்திர பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு! திங்கள் முதலே அமலுக்கு வருகிறது! தமிழக அரசு அறிவிப்பு | Tamilnadu govt raises service fees of Registrations from July 10 - Tamil Oneindia
பத்திரம் எழுதுகிறவரின் ஊழியர் ஒருவர் நம்முடன் வருவார். அந்த பத்திரம் எழுதுபவருக்கு இன்றைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அத்தனை பேரின் பத்திரங்களையும் மொத்தமாக எடுத்துக் கொண்டு பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு அத்தனை பேரையும் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவர்கள்தான் அதாவது பத்திரம் எழுதுகிற நபரின் ஊழியர்கள் தான் அரசு அலுவலர்களை சந்திப்பார்கள். அரசு அலுவலர்கள் நில விவரங்களைப் பார்வையிடுவதற்கான கோப்புகளையும் இவர்கள்தான் எடுத்துக் கொடுப்பார்கள். அதாவது அறிவிக்கப்படாத அரசு ஊழியராகத்தான் பத்திரம் எழுதக் கூடிய நபரின் ஆபீசில் வேலைபார்ப்பவர்கள் பணியாற்றுவார்கள்.

உலக ஊழல் எதிர்ப்பும் இந்திய ஊழல் வளர்ப்பும் - தமிழ் டு தமிழ்

நீதிமன்றத்தில் கூவி அழைப்பது போல நம் பத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலர்பார்த்துவிட்ட பின் கூப்பிட்டு புகைப்படம், ரேகை, கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பிவிடுவர். அவ்வளவு தானே உடனே பத்திரம் கைக்கு வராது. அடுத்த நாள் பத்திரம் எழுதுபவரிடம்தான் போக வேண்டும். அவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து கணக்கு செட்டில் செய்த பின்னர் பத்திரங்களை வாங்கி பத்திரமாக வைத்திருப்பார்கள்.

அரசுக்கு இதில் எவ்வளவு கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதுகிறீர்கள் எனில் ரூ25000 மொத்தமாக பத்திரம் எழுதக் கூடியவர் ஆபீசில் கொடுத்துவிட வேண்டும். இதில் அரசுக்கு போயிருப்பது வெறும் ரூ4,500. எஞ்சியவை பத்திரம் எழுதியதற்கு, பத்திரம் வாங்கியதற்கு,  அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததற்கு என பிரிக்கப்படுகிறது.

ஊழல் - ஏனைய கவிதைகள்
ஆக இந்த நாட்டின் அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாமானியன் நேரடியாக சென்று ஒரு ஆணியையும் கழற்றவே முடியாது. ஏன் நேரடியாக சென்று பத்திரப் பதிவு அதிகாரியை சந்திக்கலாம் ஆனால் லஞ்சபணம் எல்லாம் பத்திர எழுத்தர் முன் கூட்டியே வாங்கிவிடுவார் ஆனால் அதிகாரியிடம் ஒரு சந்தேகம் கூட கேட்க முடியாது என்கிற செம சூப்பரான கட்டமைப்புதான் உள்ளது. அதை திறமையாக கையாளும் ராஜேஸ்வரி  போன்ற அதிகாரிகள் இதில் பழம் தின்று கொட்டை போட்ட ஒரு சில அதிகாரிகளையே மிஞ்சி விட்டார்வர் தான்  ராஜேஸ்வரி.

Electricity inspector arrested for taking bribe | லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கரை புரள்வது பத்திரம் பதிவதற்கு லஞ்சம், போலி பத்திரம் பதிய கூடுதல் லஞ்சம், போலி என்று தெரிந்தும் அதை ரத்து செய்யாமல் இருப்பதற்கு, இன்னும் கூடுதல் லஞ்சம் வசூலிக்கின்றனர்.
தவறு செய்யும் சார் பதிவாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பெயரளவுக்கு கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே எடுக்கின்றனர். ஆன்லைன் நடைமுறைகளை எல்லாம் மீறி, பல்வேறு வழிகளில் லஞ்சம் சார் பதிவாளர்களை சென்று சேருகிறது.

மேலும் அரசு பத்திரபதிவு அலுவலங்களில் புரோக்கர்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று இத் துறை சார்ந்த அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் தொண்டாமுத்தூர் சார்பதிவாளரின் மாருதி Breza TN33BP6768 என்ற எண்ணுடைய அவரது காரை பதிவாளர் சொல்லும்போதெல்லாம் ஆக்டிங் டிரைவராக செயல்படுவர் அலுவலகத்திற்கு அருகே உள்ள பத்திர எழுத்தர் என்ற பெயரில் உள்ள புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதை தடுத்து, பொதுமக்களுக்கு பணம் இழப்பு ஏற்படுவதை தடுக்க, அரசு நிர்வாகத்தின் கடும் முயற்சி அவசியம் தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. வருடத்திற்கு ஒரு சில வழக்குகள் என பதிவு செய்கின்றனர். முறையாக விசாரிப்பது கிடையாது.

காட்பாடி பதிவாளர் கவிதா

ஒருவரை கைது செய்தால் அவரது வீடு அலுவலகங்களில் சோதனையிட வேண்டும். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்றும் ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறெல்லாம் தற்போது செயல்படுவதில்லை பெயரளவிலேயே லஞ்ச ஒழிப்பு துறையாக இருக்கிறது”ராஜேஸ்வரி வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்திட்ட வேண்டும் ஏற்கனவே ராஜேஸ்வரி மீது சூலூரில் போலி பத்திரம் பதிவு செய்தாக புகார் உள்ளது இருந்தும் கோவை மாவட்டதில் மட்டுமே இவர் பணம் கொடுத்து தொடர்ந்து  பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி கைது | Tamil News Police officer arrested for taking bribe for passport verification

ராஜேஸ்வரியை போல மொடா முழுங்கிகளும் முழு பூசணிக்காவை சோற்றில் மறைக்கும் பல பிராடு பெண் பத்திரப்பதிவு அலுவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆவடியில் பணியாற்றி தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்றுள்ள மல்லிகேஸ்வரி தமிழகத்தில் இவரைப்போல ஊழலும் செய்ய முடியாது லஞ்சமும் வாங்க முடியாது என பெயர் பெற்றவர். ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு வரும் இனிப்பு பொட்டலங்களை கூட தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு தராமல் எல்லாவற்றையும் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் மொடா முழுங்கி. அரசு நிலங்களுக்கு போலி பட்டா தயாரித்து எடுத்து வரும் புரோக்கர்களுக்கு முன்னுரிமை தந்து சீக்கிரம் பத்திரத்தை பதிவு செய்து அனுப்பும் நல்ல உள்ளம் கொன்டவர்.

பிளாக் லிஸ்டில் உள்ள இடத்தை பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திர பதிவு செய்த ஆவடி மற்றும் திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலர்கள் ...

பதிவாளர் மல்லிகேஸ்வரி

காட்பாடி பத்திரப்பதிவு அலுவலர் கவிதா இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை  கட்டிங் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்தாராம் இவரைப் போல வேலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கவே முடியாதாம். இவரிடம் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்படுகிறார்களாம் அவ்வளவு கட்டிங் வாங்குவதில் கோல்ட் மெடல் வாங்கியவராம் கவிதா.

3 years imprisonment for EB engineer in bribery case | லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை

எதையும் ஆராயாமல் பத்திரிகை பத்திரப்பதிவு செய்வதில் இவருக்கு நிகர் தமிழ்நாட்டில் யாரும் இல்லையாம். ஆண் அதிகாரிகளை விட பெண் அதிகாரிகளே  தைரியமாக லஞ்சப்பணம் வாங்குகிறார்கள் என்பதற்கு ராஜேஸ்வரி மற்றும் மல்லிகேஸ்வரி ,காட்பாடி கவிதா போன்றவர்களே , எடுத்துக்காட்டாக உள்ளனர்.

நேர்மையின் சிகரமாக இருக்கிற பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ் இது போன்ற பிராடு பெண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை முச்சந்தியில் நிறுத்தி பொதுமக்கள் சாட்டையால் அடித்தாலும் தவறு இல்லை என்று அரசாங்கம் என்றைக்கு பொதுமக்களின் பக்கம் நிற்கிறதோ அன்றைக்கு லஞ்சம் ஒழியும் அன்றைக்கு அதிகாரிகளும் திருந்துவார்கள்.

இதையும் படிங்க.!