chennireporters.com

தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் சோறு தின்னும் ஆளுநர் ரவிக்கு சூடு சொரணை இல்லையா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்று ஆளுநர் உரையில் பேசாமல் விட்டதற்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் காங்கை குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.  தமிழ்நாடு வாழ்கவே !  பாஜக ஒழிகவே !  தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் சோறு தின்னும் ஆளுநர் ரவிக்கு சூடு, சொரணை இல்லையா? மானம் கெட்ட ரவிக்கு ஆளுநர் பதவி ஒரு கேடா? ஓடிப்போ! ஓடிப்போ! டில்லிக்கு ஓடிப்போ , ரம்மி ரவி, ரம்மி ரவி தமிழ்நாட்டில் நீ ஒரு டம்மி ரவி என இது போன்று பல கோஷங்களை எழுப்பினர்.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காங்கை குமார் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் குருவேல் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

பிரேம் பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர்கள் வீராபுரம் தாஸ் ஆசிர்வாதம், விளையாட்டுத்துறை ,மாநில துணைத்தலைவர் பூவை ராஜா, ,எல்லாபுரம் வட்டார தலைவர் சிவசங்கரன், விளையாட்டு துறை மாவட்ட தலைவர் பச்சையப்பாஸ் பிரகாஷ், வட்டாரத் துணைத் தலைவர் வள்ளியூர் ரோஸ் பங்காரு நாயுடு, பூந்தமல்லி தொகுதி தலைவர் தினேஷ், ஆவடி தொகுதி தலைவர் நரேந்திரன், கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவர் இகேந்திரன், ஆவடி துணை தலைவர் ராஜேஷ்,
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அவர்கள் சுரேஷ், அருண் பாலாஜி, சீனிவாசன், வினோத்குமார், யோகேஷ், வடிவேல், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கோமதி பாஸ்கரன் நன்றி கூறினார்.

இதையும் படிங்க.!