chennireporters.com

பள்ளி மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் மீண்டும் மறு பிரேத பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

விழுப்புரம் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி உரிமையாளர் பாஜகவை சார்ந்தவர் என்றும் அவர்கள் மீது ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கு முன்பு பல குற்றச்சாட்டுகள் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

அது தவிர பள்ளியில் மூன்று படுக்கை அறை கொண்ட சொகுசு அறைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் வைரலான தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் சம்பந்தப்பட்ட பள்ளி உரிமையாளர் ரவிகுமாரும், தனியார் பள்ளி கூட்டமைப்புத் தலைவர் நந்தகுமாரும் RSSகாரர்களாக இருப்பதும் ஏதேச்சையானதல்ல!

தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பள்ளிகளில் பிரச்சினை நடந்துள்ளது. ஆனால் அது கலவரம் ஆனதில்லை.இந்த அதீத எதிர்வினை தன்னிச்சையாக நடந்ததில்லை என்றும் இந்தக் கலவரத்தை சாதாரண மக்கள் செய்ததாகவும் பார்க்க முடியவில்லை.

 

இதன் பின்னணியில் தமிழக அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே முழுக்க முழுக்க இருக்கிறது. அதனால்தான் ‘கலவரம்’ செய்வதற்கென்றே வாட்ஸப் குரூப்புகளை உருவாக்கி அதில் சங்கிகள் ‘ஆர்கனைஸ்டு அயோக்கியர்களாகச்’ செயல்பட்டிருக்கிறார்கள். அந்த ஸ்க்ரீன்ஷாட்டுகள் யாவும் வெளிவந்திருக்கின்றன.

மேலும் ஒரே நாளில், தனியார் பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை என்று தனியார் பள்ளிகள் அமைப்பு அறிவித்து, தமிழக அளவில் பெற்றோர்களுக்கு ‘குழப்பத்தையும் பயத்தையும்’ ஏற்படுத்துவது கலவரத்துக்கு முன்பே முடிவுசெய்யப்பட்ட திட்டம்.

6 ஆண்டு அடிமை எடப்பாடி ஆட்சியில் முடிக்கற்றைகளுக்குள் பதுங்கிக் கொண்டிருக்கிற பேன்களைப் போல, ஷூக்களுக்குள் ஒளிந்திருக்கிற தேள்களைப் போல, கழிவறை இடுக்குகளில் பதுங்கி இருக்கிற கரப்பான்பூச்சிகளைப் போல RSS கூட்டம்
தமிழகத்தின் ‘அமைப்புகள்’ பலவற்றில் ஊடுருவி இருக்கிறார்கள். தமிழகத்தைக் கலவரக் காடு ஆக்கமாட்டோமா, இன்னொரு குஜராத் போன்றோ உபி போன்றோ தமிழகத்தைக் கலவரக்காடு ஆக்கமாட்டோமா என ஒவ்வொரு சூழலிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளி கூட இப்படியொரு முழுமையான RSS breeding groundதான். RSS பண்புப் பயிற்சி (மத/சாதிவெறியில் என்ன பண்பு) என்ற பெயரில் கண்ட கருமத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பள்ளி. இதை தினமலர் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

இறந்து போன ஸ்ரீமதிக்கு நீதி பெற்றுத்தரும் அதேவேளையில் இப்படியான பள்ளிகளை
எல்லாம் அரசு உடனே கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்து RSS போன்ற பயங்கரவாத அமைப்புகள் பள்ளிகளில் ஊடுருவுவதை அதிதீவிரமாகத் தடுக்க வேண்டும். மீறினால் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்.

உலகிலேயே அதிக மாணவர் மரணங்கள் நடக்கும் கல்வி நிலையங்கள் ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி, ஏய்ம்ஸ் போன்றவை.

அதை எதிர்த்தெல்லாம் ஒருமுறை கூட வாயே திறக்காத பார்ப்பனிய ஜனதா கட்சி இன்று ஏதோ தான்தான் ஆபத்பாந்தவன் என்ற ரீதியில் திட்டமிட்டுக் குதிப்பதையும் கவனிக்க வேண்டும்.

எடப்பாடி ஆட்சி தமிழகத்துக்கு செய்து விட்டு போன பெருந்தீங்குகளில் முதல்தீங்கு, RSS எனும் மனித விரோதக் கன்னிவெடியை காவிகள் அங்கங்கு புதைத்து வைக்கும்போது அமைதியாக வேடிக்கை பார்த்தது.

தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்டு மறுசீரமைப்பு செய்து கொண்டிருக்கும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு திறமையான ‘Anti-Virus’ போல் செயல்பட்டு இந்தக் காவிக் கிருமிகளை முழுதாக நீக்கும் என்ற நம்பிக்கை
இருக்கிறது. விரைவில் அது நடக்க வேண்டும். நடக்கும்.

டான் அசோக் என்பவர் இவ்வாறு எழுதியுள்ளார்.

இதையும் படிங்க.!