chennireporters.com

மோடியை கண்டு நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் ராகுல் ஆவேசம்.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் பல கண்டனம் கழுந்து வருகிறது. இது குறித்து இன்று டில்லியில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் (மோடி)பிரதமரின் கண்களில் பயத்தைக் கண்டேன் என்று  ராகுல் காந்தி தெரிவித்தார். 

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது ராகுல் காந்தி அதானி விவகாரத்தில் இருந்து திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான மக்கள் குரலாக தொடர்ந்து என் குரல் ஒலிக்கும். 

அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு  இருக்கிறது என்று கேள்வி கேட்பதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். தகுதி நீக்கத்தை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன். அதானி மோடி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்.  ஜனநாயகத்தை பற்றி பேசும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை . நான் வெளிநாட்டு சக்திகளை அணுகவும் இல்லை இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்கவே போராடுகிறேன்.என்னை சிறையில் அடைத்தாலும் நான் பயப்பட மாட்டேன். கேள்வி கேட்பதை நான் நிறுத்த மாட்டேன்.

எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பட மாட்டேன் எந்த வகையிலும் நான் இந்திய அரசுக்கு எதிராக செயல்படவில்லை. அதானி குடும்பத்தின் சில முதலீடுகள் சீனாவுக்கும் தொடர்புள்ளது. ஒரு முறையல்ல என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப் போவதில்லை.  தகுதி நீக்கத்தின் மூலம் எனது குரலை ஒடுக்கி விட முடியாது பாஜக அரசின் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். 

நான் முதன்முறையாக அதானி பற்றி கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மோடியின் கண்களில் அச்சத்தைக் கண்டேன் என்று கூறியுள்ளார்  ராகுல் காந்தியின் இந்த பேச்சு உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிங்க.!