chennireporters.com

அமைச்சர் காந்தியை ஏமாற்றி கல்லாக்கட்டும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார்.

ஒரு இன்ஸ்பெக்டரால் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையே அதிர்ந்து போய் கிடக்கிறது என்கிறார்கள் சில காவலர்கள்.
ராணிப்பேட்டை தனிப்பிரிவு (S.B. INSPECTOR) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சசிகுமார் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் அமைச்சர் காந்தி பெயரை சொல்லி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள், தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், பி.எச்.எல் பகுதியில் உள்ள பல நிறுவனங்களில் உயர் போலீஸ் அதிகாரிகள் பெயரை சொல்லி பணம் பறிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. அது தவிர ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர்களை பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துவதாகவும் அவர்களை தனியாக சந்தித்து அவருடைய உடல் அமைப்பை கேலி செய்யும் வகையில் பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ஒரு பெண் காவலர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அந்த கடிதத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பல பெண் காவலர்களைஅவர் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

இவர்  லஞ்சம் வாங்குவதில் கை தேர்ந்தவராம். ஏற்கனவே இவர் சென்னையில் வேலை செய்தபோது லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு வந்தவர் ஆறு ஆண்டுகளாக வேலையில்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தவர் இவர் மீது வழக்கு எண் 8/ac/2008/cc u/s 7 of prevention of corruption act altered to section 13 (2)read with 13( i) (d) 1988 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகுமார் பின்னாளில் புகார் கொடுத்தவரிடம் காலில் விழுந்து புகாரை வாபஸ் பெற செய்து வழக்கிலிருந்து விடுதலை பெற்று பணியில் சேர்ந்தார்.

 

இவர் திருவண்ணாமலையில் பணியாற்றிய போது கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பெண் காவலர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்கிற புகார் நிலுவையில் உள்ளது. அது தவிர இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் சொல்லுகிறார்கள்.

 

முதல் மனைவி வேலூரிலும் இரண்டாவது மனைவி சித்தூரிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 10 கோடியை தாண்டும் என்கிறார்கள் இவரால் பாதிக்கப்பட்ட சில காவலர்கள்.

ஒரு மாவட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்ற வேண்டுமென்றால் அவர் மீது எந்தவித குற்ற நடவடிக்கையோ குற்றப் பின்னணியோ இருக்கக் கூடாது என்பது காவல்துறையின் முக்கிய சட்ட திட்டம் ஆகும். ஆனால் அதிகாரிகள் எப்படி இவரை தனிப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டராக நியமித்தார்கள் என்று தெரியவில்லை. 

ஆனால் அமைச்சர் காந்தியின் பெயரைச் சொல்லி இவர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தனிப்பிரிவின் இன்ஸ்பெக்டராக  பணியில் சேர்ந்த நாள் முதல் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட  டி.ஐ.ஜி ஆனி விஜாயாவின் பெயர் சொல்லி பல லட்ச ரூபாய் இவர் சுருட்டினாராம் .

அது தவிர அரக்கோணம், சோளிங்கர், நெமிலி,வாலாஜா ,சிப்காட் போன்ற பகுதிகளில் கஞ்சா மற்றும் ஆந்திரா கர்நாடகாவில் இருந்து மது வாங்கி வந்து விற்பனை செய்யும் கள்ள மது வியாபாரிகளிடம் பல லட்சம் ரூபாய் இவர் லஞ்சமாக பெற்று வருகிறார் என்று டி.ஐ. ஜி ஆனி விஜயா உளவுத்துறை உயரதிகாரிக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சசிகுமார் அமைச்சர் காந்தியிடம் போட்டு கொடுத்து ஆனிவிஜயாவை காலி செய்து விட்டாராம்.

அதே போல தனக்கு வேண்டாத போலீஸ்  அதிகாரிகள் மீது தவறான பல பொய் செய்திகளை சொல்லி அமைச்சரை உசுப்பேத்தி விட்டு  அவர்களை பலிகடா ஆக்குவது தான் சசிகுமாரின் ஸ்டைல்  என்கறார்கள்.

சசிகுமார் மீது பல்வேறு பாலியல், லஞ்ச புகார்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கு காரணம் அமைச்சர் காந்தி தான் என்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் சசிகுமார் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர் அமைச்சர் காந்தியும் தெலுங்கு பேசுபவர் அதனால் இவர் அமைச்சரின் வலது இடது கையாட்களுக்கு தானும் அமைச்சரின் சமூகம் தான் என்று சொல்லி காலரை தூக்கி விட்டுக் கொள்ளுகிறார் என்கிறார்கள்.  ஆனால் இவரை நன்கு தெரிந்த போலீஸ்காரர்கள் இவர் வேறு ஒரு சமூகத்தை சார்ந்தவர் அமைச்சரிடம் பொய் சொல்லி தனக்கு வேண்டிய காரியத்தை செய்து கொள்கிறார் என்று என்கிறார்கள்.

திருவண்ணாமலை, வேலூர் ,இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சசிகுமார் பேர் சொன்னாலே சும்மா அதிரும் பல பெண் காவலர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இனிமேலாவது உயர் அதிகாரிகள் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பொறுப்புள்ள தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து நீக்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க.!