chennireporters.com

திருச்சி ச*** டார்ச்சர் தரும் பொறுக்கி இன்ஸ்பெக்டர் சுகுமார்.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் குமுதா பெயர் மாற்றப்பட்டுள்ளது.  திருமணமாகி விவாகரத்தானவர். இவர் திருச்சியில் தங்கி இருந்து நண்பர்களுடன் சேர்ந்து போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த  குமுதா தனக்கு திருச்சி காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமார் தனக்கு  செக்ஸ் டார்ச்சர் கொடுத்து  வருகிறார்.  இதனால் கடுமையான மன வேதனையில் இருக்கிறேன் என கண்கலங்கியபடி கலெக்டரிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  அவர் கொடுத்திருக்கும் புகார் மனுவில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலையை சேர்ந்த என்னுடைய உறவினரான ஆண்டனி என்பவர் கடந்த மாதம் திருச்சியில் தேர்வு ஒன்றை எழுதுவதற்காக என்னுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை ஆபாச படம் எடுத்ததோடு அதை வைத்து அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு மிரட்டினார்.இது குறித்து நான் திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.அந்த புகாரின் பேரில் ஆண்டனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். . இந்த சம்பவம் தொடர்பாக அடிக்கடி நான் காவல் நிலையத்திற்கு சென்று வந்தேன்.  இது சம்பந்தமாக காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமார் என்னுடைய செல்போன் நம்பரை கேட்டு வாங்கியினார்.  அதன் பிறகு வாட்ஸ் அப்பில் எனக்கு ஆபாசமாக செய்திகளை அனுப்புகிறார்  செக்ஸ் வீடியோக்களையும் அனுப்புகிறார்.

வீடியோ காலில் நிர்வாணமாக வந்து என்னை தொடர்ச்சியாக செக்ஸ்டாட்சர் கொடுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் என்னுடைய ஆசைக்கு இணங்க விட்டால் உன்னை ஊரையே விட்டு அடித்து துரத்தி விடுவேன். கொலை செய்து விடுவேன், நீ  விபச்சாரம் செய்து வருகிறாய் என்று பொய் புகாரில் உன்னை கைது செய்து சிறையில் தள்ளி விடுவேன் என மிரட்டி வருகிறார்.மேலும்  இதுகுறித்து நீ சுகுமார் சாருக்கு அனுசரித்துப் போ நீ மகாராணி போல் வாழலாம் என காவலர் காளிமுத்து சப்-ஈன்ஸ்பெக்டர் லதா ஆகிய போலீசார் மூலம் எனக்கு கடும் தொந்தரவுகளை கொடுத்தார்.  இன்ஸ்பெக்டர் சுகுமாரின் இந்த செக்ஸ் டார்ச்சர் குறித்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு மற்றும்  திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ஆன்லைனில் புகார் அளித்தேன்.

அதை அடுத்து கமிஷனர் அலுவலகம் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் அலுவலகம் என பல இடங்களில் என்னை அழைத்து விசாரணை செய்தனர்.  அதன் தொடர்ச்சியாக கடந்த மே 24ஆம் தேதி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள துணை ஆனையர் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கிருந்து இன்ஸ்பெக்டர் சுகுமார், சப் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் என்னை அடித்து மானபங்கப்படுத்தி என்னுடைய செல்போனை பிடுங்கி அதில் உள்ள தகவல்களை எல்லாம் அழித்துவிட்டனர் என குறிப்பிட்டு இருக்கிறார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய  குமுதா தான் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போன போது என்னுடைய செல்போன் நம்பரை இன்ஸ்பெக்டர் சுகுமார் வாங்கி  வாட்ஸ் அப்பில் அசிங்கமாக மெசேஜ் அனுப்பினார்.  என்னை விட்டுருங்கன்னு எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.  தொடர்ந்து போலீசார் மூலம் என்னை அவர் ஆசைக்கு இணங்க சொல்லி தொந்தரவு செய்து வருகிறார்.

இது சம்பந்தமாக புகார் கொடுக்கப் போனால் என் மேலேயே புகார் கொடுக்கிறியா என்று இன்ஸ்பெக்டர் சுகுமார் என்னை அசிங்கமாக கெட்ட வார்த்தையில் பேசினார்.  போலீஸ் ஸ்டேஷனிலேயே வச்சு இன்ஸ்பெக்டர் சுகுமார் என்னை அடித்தார். நான் வைத்திருந்த செல்போனை பிடுங்குவதற்காக ஸ்டேஷனிலேயே என்னுடைய புடவையை உருவி அசிங்கப்படுத்தினாங்க இது இரண்டு போலீஸ் வீடியோ வேற எடுத்தாங்க  காவல் நிலையத்திலேயே இப்படி எல்லாம் நடந்தா நாங்க எங்க சார் போவோம் இதெல்லாம் சொன்னா என்னை பைத்தியம்னு சொல்றாங்க இதுக்கு பிறகாவது இன்ஸ்பெக்டர் சுகுமார் மேல கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாங்கன்னு நான் நம்புகிறேன் என கலங்கினார். தமிழக காவல்துறையில் இது போன்ற பாலியல் புகார்கள் தமிழக முழுவதும் பல புகார்கள் நிலுவையில் உள்ளது ஐபிஎஸ் அதிகாரிகளே பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது

காவல் நிலையத்திற்கு புகார் தர வரும் பெண்களிடம்  பாலியல் தொல்லை தருவது இது முதல் தடவை அல்ல, இது போன்ற புகார்கள் தமிழக முழுவதும் பல புகார்கள் நிலுவையில் உள்ளது. உயர் பொலீஸ்  அதிகாரிகளே பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டில் சிக்கி உள்ளனர்.

எனினும் இதுபோன்று காக்கி சட்டை அணிந்து கொண்டு  டார்ச்சர் தரும் பொம்பள பொறுக்கி நாய்களை செருப்பால் அடித்தால் தான் சமூகம் திருந்தும் என்கின்றார்கள் பெண் சமூக ஆர்வலர்கள். இதற்கு உறுதுணையாக இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் லதாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அவர் மீது பாலியல் பல பலாத்கார வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

 

இதையும் படிங்க.!