தமிழ்நாட்டில் வாழும் முப்பத்தி ஆறு வகையான பழங்குடியின மக்களுக்கு ஒப்பற்ற அமைப்பாக செயல்படுவது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆகும். சுமார் 10 லட்சம் பழங்குடியின மக்களின் உரிமைகளை ,அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு கடந்த 30 ஆண்டு காலமாக எண்ணற்ற போராட்டங்களை இயக்கம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைவாழ் பெண்கள் பாதிக்கப்பட்ட பிரச்சினையிலிருந்து தென்கோடி கடமலைக்குண்டு பழங்குடியினர் பிரச்சினைகள் வரை தமிழ்நாடு முழுவதும் பழங்குடி மக்களின் பிரச்சினைகளில் உடனே தலையிட்டு பாதுகாத்து வருகின்ற மகத்தான பணியை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் முன்னின்று நடத்தி வருகிறது.
செங்கற்பட்டு மாவட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா அரசின் தொகுப்பு வீடுகள் இருளர் பழங்குடி இன மாணவிக்கு மருத்துவ கல்வி கட்டணம் உதவியும் காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு அரசின் வீடுகளை பெற்றுத் தந்ததும் இந்த அமைப்புதான்.
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் வாழும் பழங்குடிகளான இரவலர் ,காடர், மலமலசர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, இனச்சான்று உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் வெற்றி பெற்றுள்ளோம்.
கன்னியாகுமரி ,சேலம் கல்வராயன், திருப்பத்தூர் ஜவ்வாதுமலை , கள்ளக்குறிச்சி, பெரிய கல்வராயன் மலை ,சித்தேரி மலை ,உள்ளிட்ட பல மலைப்பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை பட்டா ஆயிரக்கணக்கான மக்களுக்கு பெற்று தந்துள்ளது இந்த அமைப்பு.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைக்கு குடிநீர் மின்சாரம் சாலை இதர கட்டமைப்பு பெற்று தந்ததுடன் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகாலமாக வாக்களிக்க வாய்ப்பு இல்லாத திருமூர்த்தி மலையில் வசிக்கும் புலையன் இன மக்களுக்கு முதன்முறையாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தது.
இந்த பழங்குடியின மக்கள் அமைப்பு பழங்குடியினருக்கான நல வாரியத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான நலவாரிய அட்டைகளையும் என்று அரசின் நலத்திட்டங்களை பெருவாரியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெற்று தந்துள்ளோம் .
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் வாழும் அனைத்து பழங்குடியின மக்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா அரசின் தொகுப்பு வீடுகள் ,இனச்சான்று, மின்சாரமே பார்க்காத பழங்குடி மக்களுக்கு கிராமங்கள் தோறும் மின்சாரம் குடிநீர் வசதிகளை பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் .
மலை குறவன் பழங்குடி இனத்தவரான தட்டரணைதங்கம், லாக்கப் மரணத்திற்கு நீதி கேட்டும் திருப்பத்தூர் ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களை மிரட்டி பணம் பறித்து பொய் வழக்குப் போடுவதை கண்டித்தும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
மைய அரசின் பழங்குடியினருக்கான சிறப்பு துணை திட்டத்தின் நிதியையும் மாநில அரசின் நிதியையும் முழுமையாக பழங்குடி மக்களுக்கே செலவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
மத்திய மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பழங்குடி ஊழியர்கள் மீது மெய்த்தன்மை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை ஆக்குவதை தடுத்து நிறுத்தி ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை நடத்தி முடித்துவிட வேண்டும்.
அரசு ஆணைப்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் பழங்குடியினருக்கான இனச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இனச்சான்று கோரி விண்ணப்பிக்க ஆன்-லைன் முறையை ரத்து செய்து நேரடி மனுக்கள் பெறப்பட்டு இனச்சான்று வழங்கப்பட வேண்டும்.
டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது பரிந்துரை செய்த குறவன் ,குறவர் உள்ளிட்ட 27 பிரிவினரையும் குருமன்ஸ் இன சட்டத்தின் உட்பிரிவுகளையும் நரிக்குறவர் என்ற குருவிக்காரர் மக்களையும் பழங்குடி பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.
புலையன், வேட்டைக்காரன் பழங்குடி பட்டியலில் இருந்ததை நீக்கியது மீண்டும் பழங்குடி பட்டியலில் இணைத்திட உடனடியா மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் .
ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர், குத்தியாலத்தூர், பர்கூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை (ஈரோடு மாவட்ட மலையாளி) பழங்குடி பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் தமிழகத்தில் மலை உச்சியில் வாழும் மலைமக்களையும், சமவெளியில் வாழும் பழங்குடி மக்களையும் இணைத்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக இன்றளவும் போராடி வரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 13 14 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் ஐ.வி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டினை சிறப்பித்து அகில இந்திய ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கின்றார்கள் அனைவரும் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட மலைவாழ் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த அமைப்பின் சார்பாக வரும் 13ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஐ வி ஆர் திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டிற்கு பி டில்லிபாபு மாநிலத் தலைவர் தலைமை தாங்குகிறார் ஆர் தமிழரசி மாவட்ட செயலாளர் திருவள்ளூர் வரவேற்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் சி.பி.ஐ.எம் அரசியல் தலைமைக்குழு பிருந்தா காரத். ஜிதேந்திர சவுதரி ஆதிவாசி அமைப்பின் தேசிய கன்வீனர் சண்முகம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் மாநில பொதுச் செயலாளர் இரா சரவணன் துளசி நாராயணன் ஏ.வி. சண்முகம் பே சண்முகம் எஸ் கோபால் பொன்னுசாமி சின்னதுரை ஆகியோர் கலந்து கொள்கின்றனர் .