chennireporters.com

#Tamil Nadu registration department அமைச்சர் மற்றும் அரசியல்வாதிகள் பெயர் சொல்லி 300 கோடி ரூபாய் சொத்து சேர்த்த பத்திரப்பதிவு துறையின் கூடுதல் பதிவுத்துறை தலைவர் முகமது ஜாஃபர் சாதிக்.

#exclusivenews  #exclusivenews  #exclusive news

மக்களையும் ஏமாற்றி மச்சானையும் ஏமாற்றி பல கோடி சொத்து சேர்த்த கூடுதல் பத்திரப்பதிவுத்துறை தலைவர் முகமது ஜாஃபர் சாதிக்.

பத்திரப்பதிவுத்துறையில் 30 ஆண்டு காலம் பணியாற்றி 300 கோடி ரூபாய் சொத்து சேர்த்த பத்திரப்பதிவு துறையின் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஜாபர் சாதிக் நாளை ஓய்வு பெற இருக்கிறார். அவர் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன இந்த புகார் குறித்து முகமது ஜாபர் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். 

 

அவரை தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் தொழிலதிபர்களும் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். எனவே தன்னை ஒன்னும் செய்ய முடியாது என்று மார்தட்டி வருகிறார் ஜாபர். மக்களையும் ஏமாற்றி குடும்ப உறுப்பினர்களையும் ஏமாற்றி 300 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்து எப்படி என்பதை தான் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் முகமது அசதுல்லா இவரது மகன் தான் முகமது ஜாபர் சாதிக் 1994-ம்ம் ஆண்டு குரூப் ஒன் தேர்வு எழுதி பத்திரப்பதிவுத்துறையில் பணிக்கு சேர்ந்தவர். கடலூர், பெரியகுளம், கோவை, சேலம், சென்னை போன்ற பகுதிகளில் பணியாற்றியவர் இவர் தனது உறவினர்கள் பெயரில் அதாவது மனைவி மைத்துனி மாமியார் சொந்த அக்கா என பலர் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் வீட்டு மனைகள் நிலங்கள் வாங்கி வைத்துள்ளார்.

கூடுதல் பத்திரப்பதிவுத்துறை தலைவர் முகமது ஜாஃபர் சாதிக்.

சேலத்தில் மட்டும் இவருக்கு 50 வீடுகள் இருக்கிறது ஒவ்வொரு வீடுகளும் கோடி ரூபாயை தாண்டும். சேலம் ஏற்காட்டில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ரிசார்ட் உள்ளது. இந்த இடத்தில் தான் பல முக்கிய விஐபிகள் அரசியல் கட்சி தலைவர்கள் போலீஸ் அதிகாரிகள் என பலருக்கும் இங்கே வரவழைத்து பார்ட்டி தருவார். கோவையில் ரிஜிஸ்டராக பணியாற்றிய போது நில புரோக்கரான விஜயகுமார் என்பவர் மூலம் பல இடங்களை வாங்கியுள்ளார் அவர் நடத்தும் ரியல் எஸ்டேட்டில் முறைகேடான பல இடங்களுக்கு இவர் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். புரோக்கர் விஜயகுமார் தான்  முகமது ஜாஃபர் சாதிக்கின் பினாமியாக செயல் பட்டு வருகிறார்.

தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.

இந்த நிலையில் அவர் கோயம்புத்தூரில் சம்பாதித்தது பல கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். தன்னுடைய மாமனார் சையது இஸ்மாயில் குடும்ப சொத்துக்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் திருநெல்வேலியில் உள்ளது. அந்த சொத்துக்களை தனது மைத்துனர்களுக்கு தராமல் தன்னுடைய மனைவி பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டார். தனது மனைவி பாத்திமா பெயரில் பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது. வெளிநாட்டில் உள்ள தனது மைத்துனி பெயரில் அதாவது பர்வீன் பாத்திமா பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார்.

கூடுதல் பத்திரப்பதிவுத்துறை தலைவர் முகமது ஜாஃபர் சாதிக்.

ஜாபர் ஓய்வுக்குப் பிறகு தனது மனைவி மைத்துனியிடம் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொள்வதாக ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுள்ளனர். இன்னொரு மூத்த மைத்துனி தாஹிரா பாத்திமா தூத்துக்குடியில் இருக்கிறார். அவர் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் உள்ளது. மேலும் மைத்துனர் சையத் ரிப்பான் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை வாங்கி வைத்துள்ளார் சமீபத்தில் சேலத்தில் உள்ள ஸ்டீல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை தன்னுடைய மகன் சல்மானுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமாக ராஜேஸ்வரி மஹாலில் திருமணம் செய்து வைத்தார்.

பத்திர பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்.

அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் சொத்துக்களையும் சீதனமாக பெற்றுள்ளார் இவருடைய உடன் பிறந்த அக்கா சீரின் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. மாமியார் ஜமீனா பேகம் பெயரில் பல கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கி வைத்து அவர் இறப்பதற்கு முன்னதாக தங்கள் பெயரில் உள்ள இந்த சொத்துக்களுக்கும் என் வாரிசுகளுக்கும் எந்த உரிமையும் இல்லை என்று ஒரு ஆவணத்தை தயார் செய்து வாங்கி வைத்துக் கொண்டு தன் மனைவி பெயரில் மாற்றிக்கொண்டார் முகமது ஜாஃபர் சாதிக்.

நாளை ஓய்வு பெற இருக்கும் முகமது ஜாஃபர் சாதிக்  தமிழ்நாட்டில் உள்ள 576 சார் பதிவாளர்கள் இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகளும் வெகுமதியும் தர ஏற்பாடு செய்துள்ளனர்.

Sub registrar offices go cashless across Tamil Naduto curb corruption |  City - Times of India Videos

ஜாபர் சாதிக் மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையிலும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு ஏன் என்று சொன்னால் பிரச்சனை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட நில புரோக்கர்கள் தொழிலதிபர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் சமாதான முறையில் பேசி தனக்கு வேண்டிய காரியத்தை வெற்றிகரமாக  சாதித்துக் கொள்ளும் திறமை உள்ளவர் என்கின்றனர் அவருடன் பணியாற்றும் அதிகாரிகள். ஏறக்குறைய முகமது ஜாபர் சாதிக்கின் சொத்து 300 கோடியை தாண்டும் என்கின்றனர் விவரம் தெரிந்த அதிகாரிகள்.

இவருடைய உதவி தேவை என்றால் குறைந்தபட்சம் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் அல்லது தங்க நகைகளுடன் சென்று பார்த்தால் தான் அந்த வேலையை செய்து தருவாராம். தென் சென்னை மாவட்ட பதிவாளராக பணியாற்றும் சத்திய பிரியா பல கோடி ரூபாய் மோசடியும் ஊழலும் செய்துள்ளார் இசக்கி அம்மாள் என்பவர் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் சத்திய பிரியா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் சத்தியபிரியாவின் நெருங்கிய நண்பராக இருந்து அவரை பாதுகாத்து வருபவர் இந்த முகமது ஜாபர் மட்டும்தான் என்கின்றனர் சாந்தோம் பகுதியில் உள்ள சில புரோக்கர்கள். கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள குயின்ஸ் அப்பார்ட்மெண்டில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் தனது மனைவி பாத்திமா பெயரில் வீடு ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார் ஜாஃபர். சட்டத்திற்கு புறம்பாக ஜாபர் சாதிக் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

இதையும் படிங்க.!