chennireporters.com

கடைசி ரவுண்டில் கல்லா கட்டிய ஆவடி சப் ரிஜிஸ்டார் மல்லிகேஸ்வரி.

ஒரே இடத்தில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி கொள்ளையடித்த ஆவடி சப் ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய இடத்தை விட்டு  போக மனம் இல்லாத மல்லிகேஸ்வரி தான் கொள்ளை அடிக்க உறுதுணையாக இருந்த டாக்குமெண்ட் ரைட்டர்கள் அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.மல்லிகேஸ்வரிக்கு  சீனியர் டாக்குமெண்ட் ரைட்டரான சண்முகம் தலைமையில் 2 சவரன் தங்கச் செயினை பரிசளித்ததாக கூறப்படுகிறது. அது தவிர ஜே ஜே ஆபிஸ், சாரதா ஆபீஸ், டிசிஎஸ், கிங்ஸ் ஆபீஸ் போன்ற சிலர் டாக்குமெண்ட் ரைட்டர்கள் தனித்தனியாக கவர் கொடுத்ததாகவும் சொல்லுகிறார்கள். ஆவடி சப் ரிஜிஸ்டர் அலுவலக அலுவலர்கள். அது தவிர வள்ளிமயில் ஓனர், சுமங்கலி நகைக்கடை உரிமையாளர் போன்ற பெரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தனியாக மேடம் மல்லிகேஸ்வரிக்கு சிறப்பு செய்தார்களாம். கடந்த நான்கு ஆண்டுகளாக கொள்ளையடித்த பணம் போதாது என்று போகும் போது கொஞ்சம் பாக்கெட் மணிக்காக சிறியதாக ஒரு வசூல் வேட்டை நடத்தி விட்டு சென்றாராம் மல்லிகேஸவரி. இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பல புகார்கள் நிலுவையில் உள்ளதஅது தவிர வீராபுரம் ,மோரை ,வெள்ளானூர், தண்டுறை ,பட்டாபிராம், சேக்காடு போன்ற பகுதிகளில்  உள்ள பல்வேறு அரசு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த மல்லிகேஸ்வரி மீது  பத்திரப்பதிவுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு  புகார் அனுப்பப்பட்டுள்ளது.

சேக்காடு கிராமம் சர்வே எண் 149/4 பட்டா எண்: 536 என்ற இந்த இடத்தை அதாவது 40 சென்ட் காலி மனை 17646 சதுர அடி இடத்தை பாடி கிராமத்தை சேர்ந்த வால் மூர்த்தி என்பவருக்கு சொந்தமானது.  இந்த இடத்தை ஆவடி விளிஞ்சியம்பாக்கத்தை சேர்ந்த நாராயண பிரசாத், பாபு ,விஜயலட்சுமி ஆகியோர் போலி ஆவணம் தயார் செய்து நிலத்தின் உரிமையாளர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வராமலேயே இடத்தை பதிவு செய்துள்ளனர்.இதற்காக மல்லிகேஸ்வரி பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக கடந்த ஆண்டு வால் மூர்த்தி போலீசில் புகார் அளித்திருந்தார். அதேபோல பட்டாபிராம், தண்டரை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான சுமார் 80 லட்சம் மதிப்புள்ள இடத்தை அதே பகுதியை சேர்ந்த விநாயகன் மகன் அமுலு என்பவரின் தம்பி சோமசுந்தரம் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார் அவருக்கு போலி ஆவணம் மூலம் இடத்தை மல்லிகேஸ்வரி பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சண்முகத்தின் தம்பி மகன் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார் அந்த புகார் நிலுவையில் உள்ளது . அந்த புகாரை மாவட்ட பதிவாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.  இதுபோல பல்வேறு வழக்குகள்  மல்லிகேஸ்வரி மீது நிலுவையில் உள்ளது. ஆனால் மல்லிகேஸ்வரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஎஸ்பி ஜாய் தயால் தலைமையில் சோதனை நடத்தினர். அதில் பணமும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியது இந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது இப்படி பல்வேறு புகார்கள் நிலுவையில் இருந்தும் அசைக்க முடியாத சக்தியாக மல்லிகேஸ்வரி ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர் பத்திரப்பதிவு துறையின் தலைவராக இருந்த சிவன் அருள் மனைவியின் இறப்பிற்குப் பிறகு அவர் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான் பதிவு செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலர். அது தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு மாதம் மாதம் மல்லிகேஸ்வரி லஞ்சம் கொடுத்ததாக சொல்லுகிறார்கள் சில ஆவடி பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள். பல பேரின் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்ததற்கு காரணமாக இருந்த மல்லிகேஸ்வரி தற்போது மாற்றப்பட்டது. குறித்து பல புரோக்கர்களும் ஆவண எழுத்தார்களும் வழக்கறிஞர்களும் ஆனந்தத்தில் தண்ணி பார்ட்டி வைத்தார்களாம்.

ஆவடியில் மல்லிகேஸ்வரி அரசு அலுவலகங்களை மட்டும் தான் பத்திரப்பதிவு செய்யாமல் விட்டாராம். கடந்த நான்கு ஆண்டுகளில் மல்லிகேஸ்வரியின் சொத்து மதிப்பு புள்ளி விவரப்படி ஸ்பெஷல் டாகுமெண்ட், செட்டில்மெண்ட் பத்திரம்,  லே-அவுட், கமர்சியல், தனி மனை பட்டா பத்திரப்பதிவு ஆகிய ஆகியவற்றில் சம்பாதித்த வருமானம் சுமார் 50 கோடியை தாண்டும் என்கிறார்கள். 

                 

மல்லிகேஸ்வரிக்கு திருவண்ணாமலை, சென்னை ஜே,ஜே நகர் திருவள்ளூர் ,அண்ணாநகர்,பெரியகுப்பம், பூங்கா நகர், கீழச்சேரி போன்ற பகுதிகளில் நிலம் உள்ளதாக சொல்லுகிறார்கள். அவர் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ஒன்றரை கோடியை தாண்டும் என்கிறார்கள்.அது தவிர தான் பணியாற்றிய காலத்தில் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய வகையில் ஆவடி பத்திரப்பதிவு வட்டாரத்தில் மட்டும் சுமார் 200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள் எனவே செங்குன்றம் சார்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ செய்த சோதனையைப் போல ஆவடியிலேயும் சோதனை நடத்த வேண்டும் என்கின்றனர் சில வழக்கறிஞர்கள்.  

தன் குடும்பம் சுகமாய் வாழ வேண்டும் என்பதற்காக லஞ்சம் வாங்கிக் கொண்டு பல குடும்பங்களை நடுத்தெருவிலும், நீதிமன்றத்திற்கும் அலைய வைத்த பாவம் சும்மா விடாது என்கிறார் மல்லிகேஸ்வரியால் பாதிக்கப்பட்ட மோரை கிராமத்தை சேர்ந்த மங்கள மணி என்னும் பெண்.

இதையும் படிங்க.!