chennireporters.com

நம் நாடு தாயதமிழ்நாடு! தாயக நாளை கொண்டாடுவோம்.

நம் நாடு தமிழ்நாடு! தாயக நாளை கொண்டாடு!!

தமிழர் வாழும் நிலப்பகுதி பன்னெடுங்காலமாக இருந்து வந்தாலும், அது சேர, சோழ, பாண்டிய மன்னர் காலம் தொட்டும் அதற்கு முன்னான வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு தமிழர் இனமும் மொழியும் பண்பாடும் செழித்து சிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ்நாடு என்ற ஒன்று மொழி வழியாக உருவானது 1956 நவம்பர் 1ல் தான்

அந்த வழியில் தமிழர்கள் தன்னுடைய இனம் வாழ்ந்த பெரும் நிலப்பரப்பை இழந்து இருந்தாலும் தமிழர்கள் ஆட்சிப் பரப்பிற்கு உட்பட்ட ஒரு பகுதியை தமிழ்நாடு என்று கருவாக கூடிய ஒரு சூழல் உருவானது. அந்த நிலப் பகுதிக்கு பின்னாளில் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சென்னை மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று அழகிய தமிழ் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

நம் அன்னைத் தமிழ்நாடு இன்று இருக்கும் சூழல் அனைவரும் அறிந்ததே. இன்று ஆரிய கட்டமைப்பான இந்தியத்தின் கோரப்பிடியில் தமிழர் நிலம், தொழில், வணிகம், கல்வி, வேலை வாய்ப்பு, தமிழர் இறையாண்மை, அனைத்தும் சுரண்டப்பட்டு கேள்விக்குறியாக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டை காத்து அடுத்த தலைமுறைக்கு தமிழ் நாட்டை தன்னாட்சி தமிழ் நாடாக மாற்றி கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகும்.

இதனை நெஞ்சில் நிறுத்தி நாளை (01.11.2022) செவ்வாய் காலை 9 மணிக்கு அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி இனிப்பு வழங்கி தமிழ்நாடு எங்கள் தாய்நாடு தாயக நாளை கொண்டாடு என்று கூடிக் கொண்டாடுவோம் வாரீர்.

இந்நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தமிழ்நாடு பொதுவுடமை இயக்கம், மே 17 இயக்கம், தமிழ் தேச குடியரசு இயக்கம், தாய் தமிழர் இயக்கம் தமிழ் வழிக் கல்வி இயக்கம் என பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி தமிழ்நாட்டு நாளை கொண்டாட உள்ளோம்.

நீங்களும் வாருங்கள் கூடி கொண்டாடுவோம் நம் தமிழ்நாட்டை இந்திய வல்லாதிக்க, சாதிய, மதவாத பிடியிலிருந்து காத்திடுவோம். தமிழ்நாடு பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கழகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேபோல் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ .நெடுமாறன் அவர்களும் தமிழ்நாடு பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சங்க காலத்திலிருந்து மன்னர்கள் ஆட்சியில் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து கிடந்த தமிழகம், ஆங்கிலேயர் ஆட்சியில் ஒன்றுபட்ட சென்னை மாகாணம் என்னும் சிறைக்குள் அடைப்பட்டுக்கிடந்தது.

 

 

 

1956ஆம் ஆண்டு நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு முதன்முதலாக அமைந்தது. அந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழர்களின் கடமையாகும். தமிழ்நாடு உருவாகவும், நமது எல்லைப் பகுதிகளை மீட்பதற்காகவும் உயிர் ஈகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோமாக.

சாதி – சமய வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் தமிழர்களே என்ற ஒற்றுமை உணர்வை ஒன்றுபட்டு நின்று மேலும் வளர்ப்போம் என்று என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இதையும் படிங்க.!