chennireporters.com

#Constitution: இந்திய அரசியல் அமைப்பை உருவக்கியவர் அம்பேத்கர்.

 ஜனவரி 26-ம் தேதி இந்தியா அரசு  குடியரசு தினமாக கொண்டாடுகிறது.  இந்திய அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

அந்தியாவின் 75 வது குடியரசு தினமான இன்று குடியரசு தினம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு;  1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தான் இந்திய அரசியலமைப்பு முதன் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இப்படியாக நமது குடியரசு தினத்திற்கு பின்னால், அரசியல் அமைப்பு சபை, அண்ணல் அம்பேத்கர், இந்திய பிரிவினை, காங்கிரஸ் கட்சி மற்றும் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் என பல காரணங்கள் உள்ளன. அவைகளை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

News18

குடியரசு தினத்தின் வரலாறு:

அரசியல் அமைப்பு சபை என்பது இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு அதன் முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது, இதில் 9 பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நினைவூட்டும் வண்ணம், ஆரம்ப காலத்தில், சட்டமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு மற்றும் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, ஆகஸ்ட் 15, 1947ல், அந்த எண்ணிக்கை 299 ஆக குறைக்கப்பட்டது.

இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கும் போதும் மற்றும் ஆலோசிக்கும் போதும், ​​கிட்டத்தட்ட 7,600 திருத்தங்களை முன்வைத்தது மற்றும் சுமார் 2,400 திருத்தங்களை நீக்கியது. இந்த அரசியல் அமைப்பு சபையின் கடைசி அமர்வு நவம்பர் 26, 1949 அன்று முடிவடைந்தது, அப்போது தான் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 26, 1950 இல் 284 உறுப்பினர்களின் கையொப்பத்தைத் தொடர்ந்து இது நடைமுறைக்கு வந்தது.

 

1930இல் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) இந்திய சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்த நாள் என்பதால் தான் ஜனவரி 26 இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸின் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் இந்த நாளில் அறிவிக்கப்பட்டதன் விளைவாகவே இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. காங்கிரஸின் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் ஆனது ஆங்கிலேயே காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான நாடு தழுவிய அரசியல் இயக்கத்தின் தொடக்கமாகவும் அமைந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.குடியரசை கற்பிப்போம்..‌
இந்தியாவை சட்டத்தால் செதுக்கியவர் அறிவர் அம்பேத்கர்….

அதே ஆயுதத்தால்
குடியரசு நாடாக்கி
வாக்குரிமையை
நிர்மாணித்தவர்
அம்பேத்கர்.

சுதந்திர இந்தியாவில்
சட்டம் தான் சாட்டை என சாத்தியமாக்கியவர். அம்பேத்கர்

கூட்டாட்சி தத்துவத்தை கொள்கையாக்கி….
மாநிலத்தில் சுயாட்சி ஒன்றியத்தில் கூட்டாட்சி என்ற நிலைக்கு வித்திட்டவர்
அறிவர் அம்பேத்கர்

சமத்துவமும் சமூக நீதியும் தம் இரண்டு கண்களாக்கி…
பெண்ணுரிமையை நிலைக்கச் செய்து…
சகோதர வாஞ்சையோடு சமய நல்லிணக்கத்தை நிர்மாணித்த
தன்னிகரில்லா தத்துவ மேதை அம்பேத்கர்.

படிநிலை. சாதிய சனாதனத்தை
வேரறுக்க
சமரசமின்றி சாட்டையை சுழற்ற வைத்தவர்
அண்ணல் அம்பேத்கர்.

அவரின் அறிவாயுதத்தை
அடியொற்றி…
அனைவருக்குமான
சம நீதி அரசியலை சாத்தியம் ஆக்குவோம்.

அனைவருக்கும் சென்னை ரிப்போட்டர்ஸ் .காம் இனையதளத்தின் சார்பில் அனைவருக்கும் இந்திய குடியரசு நாள் நல்வாழ்த்துகள்.

இதையும் படிங்க.!